ஜான் டெர்ரீ ஆலையை கையகப்படுத்தியது பாலி ஹோஸ்

By செய்திப்பிரிவு

சென்னையில் உள்ள அசோக் லேலண்ட் ஜான் டெர்ரீ ஆலையை பாலி ஹோஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.

1996-ம் ஆண்டு பிவிசி தயாரிப்பில் ஈடுபட்ட பாலிஹோஸ் நிறுவனம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. மிக அதிக அளவில் ஹோஸ் உற்பத்தி செய்யும் நிறுவனமாக வளர்ந்துள்ளது.

இந்நிறுவனம் கட்டுமான கருவி உற்பத்தி செய்யும் அசோக் லேலண்ட் ஜான் டெர்ரி ஆலையை அதன் உற்பத்தி கருவிகளுடன் கையகப்படுத்தியுள்ளது. இந்த ஆலை 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கட்டிடம், இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் இந்நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்த நிறுவனத்தை வாங்கியதன் மூலம் கட்டுமானம் மற்றும் விவ சாயத்துக்குத் தேவையான ஹைட் ராலிக் உப கருவிகள் தயாரிப் பில் ஈடுபட பாலி ஹோஸ் திட்ட மிட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சூர்ய நாராயணன் தெரிவித்துள்ளார். பாலிஹோஸ் நிறுவனம் கேட்டர் பில்லர் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

20 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

28 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

34 mins ago

ஆன்மிகம்

44 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

மேலும்