இங்கிலாந்தில் இருக்கும் மல்லையா கட்டுப்பாட்டில் யுனைடெட் புருவரீஸ்

By பிடிஐ

வங்கிகளில் வாங்கிய கடன் சுமை காரணமாக இங்கிலாந்துக்கு தப்பிச் சென்ற பிறகும், இப்போதும் விஜய் மல்லையாவின் முழுக் கட்டுப்பாட்டில்தான் யுனைடெட் புருவரீஸ் குழுமம் உள்ளது. அந்த குழுமத்தைச் சேர்ந்த யுனைடெட் புருவரீஸ் ஹோல் டிங்ஸ் அவருக்கு மொத்தமாக ரூ.1.6 கோடி அளித்துள்ளது.

யுனைடெட் புருவரீஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ள வகையில் ஹெனிகன் நிறுவனம் மல்லையாவுக்கு ரூ.2.56 கோடி அறிவித்துள்ளது. எனினும் இந்த தொகை வருமான வரித்துறையின் உத்தரவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 29 ம் தேதி நடை பெற உள்ள ஆண்டு பொதுக்குழு கூட்டத்துக்காக சமீபத்தில் ஆண்டு அறிக்கையை யுபி ஹேல்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இந்த நிறுவனம் 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் தேதி முதல் நிர்வாக இயக்குநர் இல்லாமல் செயல்பட்டு வருவ தாகக் கூறியுள்ளது. அவரது செயல்பாடுகள் காரணமாக அவரது முதன்மை அதிகாரி பணியை மறுஆய்வு செய்ததாக நிறுவனம் கூறியிருந்தது, எனி னும் அவர் லண்டன் சென்ற பிறகும் நிறுவனத்தின் அனைத்து விவகாரங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். பல்வேறு செயல் அதிகாரிகள் தொடர்ச்சியாக அவருக்கு தங்க ளது செயல்பாடுகள் குறித்து அறிக்கை அளித்து வருகின்றனர்.

மத்திய வரி விதிப்பு அதிகாரி 2015 ம் ஆண்டு நவம்பர் 24 ம் தேதி யுபி ஹோல் டிங்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பிய கடிதத்தில், இயக் குநர்களுக்கு அளித்த ஊக்கத் தொகைகள் குறித்த விவரங்களை அளிக்கு மாறு கேட்டுள்ளார். யுனைடெட் புருவரீஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டங்களில் கலந்து கொண்டதற்காக மல் லையாவுக்கு ரூ 3.2 லட்சம் அறிவித் துள்ளது. 2015-16 நிதியாண்டுக் காக 1.20 லட்சம் டாலர் வாங்கி யுள்ளார் (கடந்த ஆண்டு 1.20 லட்சம் டாலர்) மற்றும் 89,600 பிரிட்டன் பவுண்ட் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்