அக்டோபர்-டிசம்பர் காலாண்டுக்கான சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி 0.4% உயர்வு

By செய்திப்பிரிவு

சிறு சேமிப்பு திட்டங்களின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டுக் கான வட்டி விகிதத்தை 0.4 சத வீதம் வரை உயர்த்தியுள்ளது மத்திய நிதி அமைச்சகம். இதன் மூலம் இந்தக் காலாண்டில் பிபிஎஃப், என்எஸ்சி உள்ளிட்ட சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் கூடுதல் வருமானம் பெறுவார்கள்.

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டுக்கும், அரசு கடன் பத்திரங்களின் வருமானத்தைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும் என்று 2016ல் மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்தது.

அதன்படி தற்போது அரசு கடன் பத்திரங்களின் வருமானம் உயர்ந்துள்ளதால் மத்திய நிதி அமைச்சகம் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை உயர்த்த முன்வந்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த நிதி ஆண்டின் 3-ம் காலாண் டில் ஐந்தாண்டு வைப்பு நிதி, ரெக்கரிங் டெபாசிட், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ஆகியவற்றின் வட்டி விகிதம் 0.4 சதவீதம் உயர்த்தப்பட்டு முறையே 7.8, 7.3 மற்றும் 8.7 சதவீதமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இவைதவிர பிபிஎஃப், என்எஸ்சி, செல்வமகள் சேமிப்பு திட்டம், கிஸான் விகாஸ் பத்ரா சேமிப்பு திட்டம் ஆகியவற்றின் வட்டி விகிதமும் 0.4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய வட்டி விகிதத்தின்படி பிபிஎஃப், என்எஸ்சி இரண்டு திட்டங்களும் 8 சதவீத வட்டியும், செல்வ மகள் சேமிப்பு திட்டம் அதிகபட்சமாக 8.5 சதவீத வட்டி யும் வழங்குகிறது.

கிஸான் விகாஸ் பத்ரா சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் 7.7 சதவீதமாகும். மேலும் இதன் முதிர்வு காலமும் 118 மாதங்களிலிருந்து 112 மாதங்களாகக் குறைக்கப் பட்டுள்ளது.

மேலும் ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டு கால வைப்பு நிதி திட்டங் களின் வட்டி விகிதமும் 0.3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் வங்கி சேமிப்பு கணக்குகளின் வட்டிவிகிதம் மாற்றமில்லாமல் 4 சதவீதத்திலேயே தொடர் கிறது.

அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலத்தில் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த வட்டி விகிதத்தின் பலன் கிடைக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

உலகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

11 hours ago

மேலும்