2018 நிதியாண்டில் ரூ.68,789 கோடி கடன் வழங்கி 47 சதவீத வளர்ச்சியில் மைக்ரோ பைனான்ஸ் துறை 

By செய்திப்பிரிவு

இந்திய மைக்ரோ பைனான்ஸ் துறை 2018ம் நிதியாண்டில் 47 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. மார்ச் 2018 நிலவரப்படி ரூ.68,789 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய நிதி யாண்டில் ரூ.46,842 கோடியாக இருந்தது.

`பாரத் மைக்ரோபைனான்ஸ் 2018’ என்கிற அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வெளியிட்டு பேசிய மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் ( எம்எஸ்எம்இ) துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கூறுகையில்,

வங்கிகளின் வட்டி விகிதத்தை விட, மைக்ரோ பைனான்ஸ் நிறு வனங்களிடம் குறைவான வட்டி விகிதத்தில் மக்கள் கடன் பெறும் சூழல் உருவாகியுள்ளது. தற் போதைய சூழலில் வங்கிகளும், மைக்ரோ பைனான்ஸ் துறையும் இணைந்து செயல்பட்டு வரு கின்றன.

வாராக்கடன் என்கிற சிக்கலே இல்லாமல் சிறு தொழில்கள் துறை மேம்பாட்டு வங்கி (சிட்பி) செயல்பட்டு வருகிறது. மைக்ரோ பைனான்ஸ் கடன் பெற்ற தொழில் முனைவோர்கள் யாரும் இந்தி யாவை விட்டு வெளியேறும் எண் ணம் கொண்டவர்கள் இல்லை என்றார்.

சிறு கடன் பெற்றவர்கள் தங்களது கடனை திருப்பி செலுத்தக் கூடாது என்று யோசிப்பதில்லை. கடனை திருப்பி செலுத்தாமல் நீரவ் மோடி, விஜய் மல்லையாவைப் போல இந்தியாவை விட்டு தப்பிச் செல்வதில்லை என்றும் கூறினார்.

இந்த அறிக்கையின்படி 2017-18 நிதியாண்டில் கடன் அளிப்பு விகிதம் 56 சதவீதம் அதிகரித்துள்ளது. 2017-18 நிதியாண்டில் ரூ.81,737 கோடி அளித்துள்ளது. முக்கிய 10 மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங் கள் ரூ.55,013 கோடி கடன் அளித் துள்ளன. இந்த துறை அளித் துள்ள மொத்த கடனில் இது 67 சதவீதமாகும்.

மொத்த கடனில் தென்னிந்திய மாநிலங்கள் 34 சதவீதம் பெற்றுள்ளன. கிழக்கு பகுதி 30 சதவீதமும், மத்திய மற்றும் மேற்கு பகுதிகள் 18 மற்றும் 9 சதவீதமும், வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் 7 சதவீதம் மற்றும் 2 சதவீத கடனையும் பெற்றுள்ளன.சிறு கடன் பெற்றவர்கள் கடனை திருப்பி செலுத்தக் கூடாது என்று யோசிப்ப தில்லை. நீரவ் மோடி, விஜய் மல்லையாவைப் போல இந்தியாவை விட்டு தப்பிச் செல்வதில்லை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

வாழ்வியல்

2 hours ago

க்ரைம்

32 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்