சமூக சேவைக்காக 200 கோடி டாலர்: அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஸோஸ் முடிவு

By செய்திப்பிரிவு

அமேசான் நிறுவனரும், உலகின் முதல்நிலை பணக்காரரருமான ஜெஃப் பிஸோஸ் 200 கோடி டாலரை சமூக சேவைக்காக அளித்துள்ளார். `டே ஒன் பண்ட்’ என்கிற அமைப்பினையும் இதற்காக தொடங்கியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் பதிவில்,

இந்த தொகையை குறைந்த வருமான பிரிவினர் பயன்படுத்தும் வகையில் கட்டணமில்லா ஆரம்ப பள்ளிகள் உருவாக்கவும், வீடில்லாத மக்களுக்கு வீடுகளை கட்டித்தரவும் பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிஸோஸின் தற்போதைய சொத்து மதிப்பு 16,390 கோடி டாலராகும். பிஸோஸின் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட சொத்துகள் அமேசான் பங்குகளாக உள்ளன. தற்போது அவரிடம் 8 கோடி அமேசான் பங்குகள் உள்ளன. வெல்த் எக்ஸ் ஆய்வு அறிக்கையில், முதலீடுகள், சம்பளம் மற்றும் போனஸ்கள் வழியாகவும் அவருக்கு வருமானம் வருவதாக குறிப்பிட்டுள்ளது.

அமேசான் பங்குகள் 2018-ம் ஆண்டில் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. அவரது சொத்து மதிப்பு தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில் சமூக சேவைக்காகவும் பெரும் தொகையை ஒதுக்கி வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

சினிமா

42 mins ago

இந்தியா

54 mins ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்