84 நகரங்களில் குழாய் மூலம் கேஸ் இணைப்பு :22 நகரங்களில் அதானி நிறுவனத்துக்கு உரிமம் ; நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு

By செய்திப்பிரிவு

84 நகரங்களில் சிஎன்ஜி மற்றும் குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்துக்கு உரிமம் வழங்கும் பணி நிறைவுற்று பட்டி யல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அதானி குழுமத்துக்கு 22 நகரங் களில் உரிமம் கிடைத்துள்ளது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் 86 நகரங்களுக்கு சிஎன்ஜி கேஸ் மற்றும் குழாய் மூலம் எரி வாயு வழங்கும் திட்டத்துக்கான உரிமம் வழங்குவதற்கான ஏலத்தை ஜூலை மாதம் நடத்தியது. இந்த ஏலத்தை அடுத்து திங்கள் அன்று 84 நகரங்களுக்கான உரி மம் வழங்கும் பட்டியலை வெளி யிட்டுள்ளது. இரண்டு நகரங்களுக் கான உரிமம் அறிவிக்கப்பட வில்லை. இதில் அதானி கேஸ் நிறுவனம் 13 நகரங்களில் தனித் தும், அலகாபாத் உட்பட 9 நகரங் களில் இந்தியன் ஆயில் நிறுவனத் துடன் இணைந்தும் கேஸ் வழங்கும் உரிமத்தை வென்றுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் கோயமுத்தூர், சேலம் உட்பட ஏழு நகரங்களில் தனித்து கேஸ் வழங்கும் உரிமத்தை வென் றுள்ளது. பிபிசிஎல் நிறுவனத்தின் பாரத் கேஸ் நிறுவனம் அமேதி, ரே பரேலி உட்பட 11 நகரங்களி லும், டாரென்ட் கேஸ் நிறுவனம் சென்னை, புதுச்சேரி உட்பட 10 நகரங்களிலும் கேஸ் இணைப்பு வழங்கும் உரிமத்தைப் பெற்றுள் ளன. கெயில் நிறுவனத்துக்கு ஐந்து நகரங்களில் உரிமம் கிடைத் துள்ளது.

இவைதவிர, இந்திரபிரஸ்தா கேஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோ லியம் கார்ப்பரேஷன், குஜராத் கேஸ், கிரீன் கேஸ், மகாராஷ்ட்ரா நேச்சுரல் கேஸ் உள்ளிட்ட இன் னும் சில நிறுவனங்கள் உரிமங் களைப் பெற்றுள்ளன.

அடுத்த எட்டு ஆண்டுகளில் இந்த 84 நகரங்களிலும் 4346 சிஎன்ஜி கேஸ் நிலையங்களும், 2.1கோடி குழாய் மூலம் கேஸ் வழங்கும் இணைப்புகளும் அமைக்கப்படும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் கூறியுள்ள அறிக்கையில் தெரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஓடிடி களம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்