இறக்குமதி வரி அதிகரிப்பு: ட்ரம்ப் முடிவுக்கு ஐஎம்எப் எதிர்ப்பு

By பிடிஐ

இறக்குமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினியம் மீது அதிக வரி விதிக்கும் அதிபர் டொனால்டு ட்ரம்பின் முடிவுக்கு சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இறக்குமதியாகும் உருக்கின் மீது 25 சதவீதமும், அலுமினியம் மீது 10 சதவீதம் இறக்குமதி விதிக்கப் போவதாக கடந்த வியாழக்கிழமை அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் அமெரிக்காவில் மட்டுமின்றி அமெரிக்க பொருளாதாரத்தையே குறிப்பாக உற்பத்தி, கட்டுமான துறைகளை பாதிக்கும். இவை இரண்டும்தான் அதிக அளவில் உருக்கு மற்றும் அலுமினியத்தை அதிகம் பயன்படுத்துகின்றன.

தேசிய நலன் அடிப்படையில் சில நாடுகள் இதுபோன்ற முடிவுகளை எடுக்கலாம். ஆனால் அமெரிக்கா எடுக்கும் முடிவு உள்நாட்டு தொழிலை கடுமையாக பாதிக்கும் என்று ஐஎம்எப் செய்தித் தொடர்பாளர் கெரி ரைஸ் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் நாடுகளுடன் அமெரிக்கா ஆக்கபூர்வ பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும் என்று, அமெரிக்காவின் நட்பு நாடுகளான கனடா, ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, மெக்சிகோ, சீனா உள்ளிட்ட நாடுகளும் கடுமையாக எதிர்த்துள்ளன.

ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜீன் கிளாடும், அமெரிக்காவின் இந்த முடிவை கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அதிபர் ட்ரம்ப்போ, வர்த்தக யுத்தம் நல்லது என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க கோடிக்கணக்கான டாலர்களை வர்த்தகத்தில் இழப்பதாக தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

40 secs ago

சினிமா

6 mins ago

ஓடிடி களம்

38 mins ago

கல்வி

52 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்