சர்வதேச பிராண்டுகளின் வளர்ச்சி 5 மடங்கு அதிகரிக்கும்: அசோசேம் கணிப்பு

By செய்திப்பிரிவு

அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் சர்வதேச பிராண்டுகளின் வளர்ச்சி ஐந்து மடங்கு அதிகரிக்கும் என்று அசோசேம் கணித்துள்ளது. மக்களிடையே வாங்கும் திறன் அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு டிசம்பரில் சர்வதேச பிராண்டுகளின் விற்பனை சந்தை 3000 கோடி டாலர் அளவுக்கு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சர்வதேச பிராண்டுகளின் விற்பனை 2,380 கோடி டாலராக உள்ளது.

இந்தியாவில் அதிக அளவில் சர்வதேச பிராண்டுகள் கிடைப்பது மற்றும் இளைஞர்களிடையே வாங்கும் திறன் அதிகரிப்பதும் இவற்றின் விற்பனைக்கு முக்கியக் காரணமாகும். சிறிய நகரங்களில் கூட சொகுசு கார்கள், பிரீமியம் பைக்குகளை வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியின் காரணமாக நகர்மயமாதல் மற்றும் மக்களிடையே அதிக பணப் புழக்கம் ஆகியவற்றின் காரணமாக ஆடம்பர பொருள்களை வாங்குவது அதிகரித்து வருகிறது. மேலும் சர்வதேச பிராண்டுகள் சில்லரை வணிகத்தில் அதாவது அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும் வகையில் விற்பனையை விரிவுபடுத்தியதும் விற்பனை வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.

சர்வதேச பிராண்டுகளின் விற்பனை அடுத்த மூன்று ஆண்டுகளில் ஐந்து மடங்கு உயரும். இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அடுத்த ஐந்து ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்றும் அசோசேம் கணித்துள்ளது. இதேபோல இணைய வழி மூலம் 10 கோடி பரிவர்த்தனைகள் நடக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

28 mins ago

ஜோதிடம்

36 mins ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

சினிமா

8 hours ago

மேலும்