ரிலையன்ஸ் பிக் டிவியின் மாபெரும் சிறப்பு சலுகை

By பிடிஐ

அனில் அம்பானிக்குச் சொந்தமான டிடிஹெச் சேவை அளிக்கும் ரிலையன்ஸ் பிக் டிவி நிறுவனம் புதிய சலுகைகளை வாடிக்கையாளர்களுக்காக வழங்கியுள்ளது. இலவச டி.வி. நிகழ்ச்சிகளை ஐந்து ஆண்டுகளுக்கும், கட்டண சேனல்களை ஓராண்டுக்கும் இலவசமாக பார்க்கும் வசதியை அளித்துள் ளது. இத்துடன் நிறுவனம் ஹெச்டி ஹெச்இவிசி செட் டாப் பாக்ஸை இலவசமாக வழங்க உள்ளது. மார்ச் 1-ம் தேதி முதல் முன் பதிவு செய்பவர்களுக்கு இச்சலுகை வழங்கப்படும் என ரிலையன்ஸ் பிக் டிவி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இலவசமாக பார்க்கும் வசதியை அளிக்கும் முயற்சியாக இச்சலுகைகளை நிறுவனம் அளித்துள்ளதாக நிறுவனத்தின் இயக்குநர் விஜேந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.

ரிலையன்ஸ் பிக் டிவி அதிகாரபூர்வ இணையதளத்தில் முன் பதிவுக்கு வாடிக்கையாளர்கள் ரூ. 499-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். வெளிப்புறத்தில் நிறுவனம் டிஷ் ஆன்டெனா உள்ளிட்ட சாதனங்களுக்கு ரூ.1,500 செலுத்த வேண்டும். ஆன்டெனா நிறுவும் கட்டணமாக ரூ. 250 செலுத்த வேண்டும். முன்பதிவு செய்பவர்களுக்கு 30 முதல் 45 நாள்களுக்குள் இணைப்பு அளிக்கப்படும். 3 ஆண்டுகள் பயன்படுத்தியபிறகு ரூ.2,000 தொகை ரீ சார்ஜ் சலுகையாக நிறுவனம் அளிக்கும். முதலாம் ஆண்டு முடிந்து இரண்டாம் ஆண்டிலிருந்து மாதம் ரூ.300 தொகையை கட்டணமாக செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மூன்றாம் ஆண்டில் இச்சலுகை வழங்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்