ஜெட் ஏர்வேஸை நடத்தும் விருப்ப மனுவை திரும்பப் பெற்றார் நரேஷ் கோயல்

By செய்திப்பிரிவு

ஜெட் ஏர்வேஸை ஏற்று நடத்த விருப்பமுள்ள நிறுவனங்களிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்பட்டன. நிறுவனத்தை நடத்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நரேஷ் கோயலும் விண்ணப்பித் திருந்தார்.

இயக்குநர் குழுவிலிருந்து வெளியேறிய நிலையில் மீண்டும் நரேஷ் கோயலிடமே பொறுப்பை அளிக்க எஸ்பிஐ தலைமையிலான குழு தயக்கம் காட்டியது.

இந்நிலையில் தமது மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நரேஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 25-ம் தேதி ஜெட் ஏர்வேஸ் இயக்குநர் குழுவின் தலைவர் பதவியிலிருந்து நரேஷ் கோயலும் அவரது மனைவி அனிதா வும் வெளியேறினர்.

நிறுவனத்துக்கு வழங்கிய கட னுக்கு ஈடாக நரேஷ் கோயல் வசமிருந்த பங்குகளில் கணிசமான பங்குகளை சம பங்குகளாக மாற்றின.

ஜெட் நிறுவனம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்பதற்காக இயக்குநர் குழுவிலிருந்து வெளி யேறுவதாக அப்போது கோயல் தெரிவித்திருந்தார். இவர் வெளி யேறியதைத் தொடர்ந்து பிற முதலீட் டாளர்கள் அல்லது புதிய நிறுவனங் கள் ஜெட் ஏர்வேஸை ஏற்று நடத்த முன்வரும் என எஸ்பிஐ எதிர்பார்த்து அதற்கான விண்ணப்பங்களை வரவேற்றது.

இவ்விதம் விண்ணப்பித்த நிறுவனங்களுள் ஒன்றாக நரேஷ் கோயலும் விண்ணப்பித்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. கோயலும் போட்டியில் இருந்ததை எதியாட் ஏர்வேஸ் விரும்பவில்லை என தெரிகிறது. கோயல் இடம் பெற்றால் இந்த விற்பனை நடை முறை சரியாக இருக்காது என எதி யாட் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஜெட் பங்குகள்8% சரிவு

இந்நிலையில் நிறுவனத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தப் போவதாக செய்திகள் வெளியானதால் இந்நிறுவனப் பங்குகள் 8 சதவீதம் வரை சரிந்தன. மும்பை பங்குச் சந்தையி்ல 8.62 சதவீதம் சரிந்து ரூ. 241.85 என்ற விலையிலும், தேசிய பங்குச் சந்தையில் 7.71 சதவீதம் சரிந்து ரூ. 241.50 என்ற விலையிலும் வர்த்தகமாயின.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

உலகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்