25 வருடங்கள் யார் கண்ணிலும் படாத பெராரி 275 ஜிடிபி பந்தய கார் ஏலம்

By செய்திப்பிரிவு

25 வருடங்களாக யார் கண்ணிலும் படமால் இருந்த, 1964-ல் உருவாக்கப்பட்ட முதல் புரோட்டோடைப் பெராரி 275 ஜிடிபி பந்தய கார் வரும் ஜனவரி 18,19 தேதிகளில் ஏலம் விடப்பட உள்ளது. 1966-ல் நடைபெற்ற 35-ம் ஆண்டு மான்டி கார்லோ கார் பந்தயத்தில் கலந்துகொண்டது. அதன்பிறகு பல்வேறு கார் பந்தயங்களிலும் கலந்துகொண்ட இந்தக் காரை கடைசியாக 1993-ல் கவாலினோ கடற்கரையில் பார்த்திருக்கிறார்கள். அதன்பிறகு இதனை யாரும் பார்க்கவில்லை. 25 ஆண்டுகள் மறைவாக வைக்கப்பட்டிருந்த இந்தக் கார் தற்போது பொதுவெளிக்கு வந்திருக்கிறது. கூடிங் அண்ட் கம்பெனி இந்த காரை ஏலம் விட உள்ளது.

ஏலத் தொகை 6 முதல் 8 மில்லியன் டாலர் வரை இருக் கலாம் எனக் கூறப்படுகிறது. விண் டேஜ் கிளாசிக் காரான பெராரி 275 ஜிடிபி 3.3 லிட்டர் டிப்போ 213 வி-12 என்ஜினைக் கொண்டது. மிகச் சிறந்த 10 பெராரி கார்களில் இதுவும் ஒன்று.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

21 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்