மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் ரூ. 6,000 கோடி முதலீடு

By செய்திப்பிரிவு

பங்குச்சந்தையில் சாதகமான சூழ்நிலை நிலவுவதால் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் ரூ.6,000 கோடி அளவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருக்கின்றன. மாதாந்திர வாரியாக பார்க்கும்போது கடந்த ஆறுவருடங்களில் இல்லாத அளவுக்கு இது அதிகபட்ச முதலீடாகும்.

கடந்த நான்கு மாதங்களாக மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வந்திருக்கின்றன. கடந்த ஜூலை மாதம் 5,000 கோடி ரூபாயும், ஜூன் மாதம் ரூ.3,340 கோடியும், மே மாதம் 105 கோடி ரூபாயும் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5,846 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கின்றன. கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 7,703 கோடி ரூபாயை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்தன. அதன் பிறகு அதிக தொகையை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்திருப்பது கடந்த ஆகஸ்டில்தான்.

ஆகஸ்ட் மாதம் சென்செக்ஸ் 2.86 சதவீதம் உயர்ந்தது.கடந்த 8 மாதங்களில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் செய்த நிகர முதலீடு ரூ.3,900 கோடி. ஆனால் கடன் சந்தையில் ரூ.4.6 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஓடிடி களம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்