20 கோடி பேருக்கும் பேமென்ட் வசதி; ஆர்பிஐக்கு வாட்ஸ்அப் கடிதம்

By செய்திப்பிரிவு

வாட்ஸ்அப் நிறுவனத் தலைவர் கிரிஸ் டேனியல் அதன் 20 கோடி இந்திய வாடிக்கையாளர்களுக் கும் வாட்ஸ்அப் பேமென்ட் வசதியை வழங்க அனுமதி கேட்டு ரிசர்வ் வங்கிக்குக் கடிதம் அனுப்பி யுள்ளார்.

ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான மெசேஜ் ஆப் நிறு வனமான வாட்ஸ்அப் ஆன்லைன் பேமென்ட் வசதியையும் அறிமுகப் படுத்தியது. சோதனை அளவில் இருந்துவரும் இந்த பேமென்ட் வசதியை தனது அனைத்து வாடிக் கையாளர்களுக்கும் வழங்க திட்ட மிட்டுள்ளது. இதற்காக ரிசர்வ் வங்கிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில், வாட்ஸ்அப் நிறுவனத்தின் ஆன்லைன் பேமென்ட் வசதியைத் தற் போது 10 லட்சம் வாட்ஸ்அப் வாடிக்கையாளர்கள் பயன் படுத்துகின்றனர். அவர்களிட மிருந்து சாதகமான கருத்துகள் கிடைத்துள்ளன. எனவே இந்த பேமென்ட் வசதியை வாட்ஸ் அப்பின் 20 கோடி வாடிக்கை யாளர்களுக்கும் வழங்க அனு மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

இதற்கு பின்னால் வந்த கூகுள் ரிசர்வ் வங்கி அனுமதி பெற்று தனது பேமென்ட் வசதியை வேகமாகப் பரப்பி வருகிறது. போன்பே, பேடிஎம் உள்ளிட்ட இன்னும் சில நிறுவனங்களும் ஆன்லைன் பேமென்ட் வசதிகளை வழங்குவதில் மும்முரம் காட்டி வருகின்றன. எனவே தற்போது வாட்ஸ்அப் நிறுவனமும் ரிசர்வ் வங்கியிடம் பேமென்ட் வசதியை வழங்க அனுமதி பெறுவதில் தீவிரம் காட்டுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

44 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்