நீரவ் மோடி, குடும்பத்தினருக்கு டிஆர்டி நோட்டீஸ்- ரூ. 7,000 கோடியை மீட்க நடவடிக்கை

By செய்திப்பிரிவு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்ட நீரவ் மோடி, அவரது குடும்பத்தினர் மற்றும் நிறுவனத்துக்கு கடன் மீட்பு தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள் ளது. கடனைத் திருப்பி செலுத்த வரும் ஜனவரி 15 வரை காலக் கெடுவும் விதித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாகக் கடன் வாங்கி மோசடி செய்ததோடு, அதைத் திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பிவிட்டார். அவர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக் குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. அவருடைய சொத்துக் கள் முடக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் தேடப்படும் பொருளாதார குற்றவாளியாகவும் அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவர்களிட மிருந்து வசூலிக்க வேண்டிய ரூ.7,029 கோடியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கடன் மீட்பு தீர்ப்பாயம் அவர் களுக்கு நோட்டீஸ்களைப் பிறப்பித்துள் ளது. கடந்த ஜூலை மாதத்தில்தான் பஞ்சாப் நேஷனல் வங்கி கடனை மீட்க வேண்டி தீர்ப்பாயத்தை அணுகியது. ஆறு மாதம் கழித்து தற்போது நீரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக இந்த நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நோட்டீஸில் நீரவ் மோடி, அவரது குடும்பத்தினர் மற்றும் நிறுவனங்கள் எந்தவகையான பரி வர்த்தனையிலும் ஈடுபட முடியாத அளவுக்கு முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடனைத் திருப்பி செலுத்த வரும் ஜனவரி 15 வரை காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்