ரஃபேல் ஒப்பந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து ரிலையன்ஸ் நேவல் பங்குகள் 16% உயர்வு: தீர்ப்பை வரவேற்ற அனில் அம்பானி

By செய்திப்பிரிவு

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை தேவை என்று கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்ததையடுத்து தீர்ப்பை ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி வரவேற்றுள்ளார்.

 

தீர்ப்புக்குப் பிறகு அவரது ரிலையன்ச் நேவல் நிறுவனத்தின் பங்குகள் விலை 16% அதிகரித்தது.  அனில் அம்பானி தீர்ப்பு பற்றி கூறும்போது, எனக்கும் ரிலையன்ஸ் குழுமத்துக்கும் எதிராக அரசியல் உள்நோக்கம் கொண்ட பொய்க்குற்றச்சாட்டு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இந்த தீர்ப்பை வரவேற்கிறேன்.மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா திட்டங்களில் எங்களது எளிமையான பங்களிப்பில் நாங்கள் கடப்பாடுடன் இருக்கிறோம், என்றார்.

 

இந்தத் தீர்ப்பையடுத்து ரிலையன்ஸ் நேவல் அண்ட் பொறியியல் நிறுவனத்தின் பங்குகள் விலை 16% அதிகரித்து ரூ.16.5 என்று போய்க்கொண்டிருந்தது. நிறுவன மதிப்பு 1,206 கோடி. ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் பங்குகள் 5% அதிகரித்து ரூ.300 ஆக இருந்தது.

 

எச்.டி.எஃப்.சி. செக்யூரிட்டீஸின் பிசிஜி கேப்பிடல் மார்க்கெட்ஸ் ஸ்ட்ராடஜி தலைவர் வி.கே.சர்மா கூறும்போது, “உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒரு மைல்கல். மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் முக்கிய குற்றச்சாட்டின் காற்று பிடுங்கப்பட்டுள்ளது. இதைப் பிரச்சாரமாகப் பயன்படுத்தி ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மக்களை ஏமாற்றியுள்ளனர், இதன் பலனாக 2019 தேர்தலில் பாஜகவுக்கு வாக்குகளை அவர்கள் வழங்குவார்கள்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

மேலும்