தங்கத்துக்கு விரைவில் புதிய கொள்கை: அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்

By செய்திப்பிரிவு

தங்கத்துக்கென பிரத்யேக கொள்கை விரைவில் வெளியாகும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார். ஒருங்கிணைந்த கொள்கை வகுக்கப்பட்டு வருவதாகவும், இந்த கொள்கை தங்கம் சார்ந்த தொழிலை, ஏற்றுமதியை ஊக்குவிக்க உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்நிய முதலீடு

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீடுகளை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஜப்பான், தென் கொரியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்காக சிறப்பு தொழிற் பேட்டைகள் (Industrial clusters) உருவாக்கப்பட உள்ளன. இதன் மூலம் இந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள் எளிதாக முதலீடு செய்து தொழில் செய் யும் வாய்ப்பு உருவாகும். மேலும், இந்தியா வரும் 2019-ம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் முதலிடத் தில் இருக்கும். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்தியாவில் தொழிற்பூங்காக்களை அமைக்க சீனா முடிவு செய்துள்ளது. இதுபோன்று, அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிறுவனங்களும் இந்தி யாவில் தொழிற்சாலைகள் அமைக்க முன் வந்தால் நன்றாக இருக்கும். அந்நாட்டு நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவும் அரசு தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார்.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் இந்தியாவில் 1686 கோடி டாலர் அளவிற்கு அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர், கட்டு மான மேம்பாட்டு துறை, வர்த்தகம், வாக னம், மருந்து, ரசாயனம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளில் அதிகளவில் அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்க மத்திய பிரதேசம், குஜராத், ஆந்திர பிர தேசம், ஜார்கண்ட், உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் தொழில் முனைவோர் மாநாட்டை நடத்தியுள்ளன.

வரும் இரண்டு ஆண்டுகளில் 10,000 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீடுகளை திரட்ட தி்ட்டமிட்டுள் ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்