2020 வரை அலைக்கற்றை ஏலம் நடத்தும் அவசியமில்லை: வோடபோன் ஐடியா அரசுக்கு கடிதம்

By செய்திப்பிரிவு

இந்திய தொலைத்தொடர்பு துறை நிதி நெருக்கடியில் உள்ள நிலை யில், வோடபோன் ஐடியா நிறு வனம் 2020 வரை அலைக் கற்றை ஏலம் நடத்த வேண்டாம் என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ அறிமுகத்துக்குப் பிறகு இந்திய தொலைத்தொடர்பு துறை யில் அதிகப்படியான போட்டி உருவானது. இதனால் தொடர்ந்து சேவைக் கட்டணங்களைக் குறைக்க வேண்டிய கட்டாய நிலைக்குப் போட்டி நிறுவனங்கள் ஆளாயின. இதனால், வோட போன் ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளன. இந்த நிலை யில், அலைக்கற்றை ஏலம் விடக் கூடாது என்று வோடபோன் ஐடியா நிறுவனம் தொலைத் தொடர்பு துறைக்கு கடிதம் அனுப்பி யுள்ளது. இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட பின்புதான் அலைக்கற்றைக்கான தேவை அதிகரிக்கும். மேலும், 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப் படுத்த முதலில் 4ஜி தொழில்நுட்பம் நாடு முழுவதும் சென்றடைய வேண்டியது அவசியம்.

எனவே 5ஜி அறிமுகப்படுத் துவதற்கான கட்டமைப்பு, தேவை யான ஹார்ட்வேர் உள்ளிட்டவை தயாரான பிறகு அலைக்கற்றை ஏலம் நடத்தலாம். 5ஜி தொழில் நுட்பத்துக்குத் தேவையான கட்ட மைப்புகளை உருவாக்க 2020 வரை ஆகலாம். எனவே அதுவரை அலைக்கற்றை ஏலம் விட வேண் டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளது.

மேலும், தொலைத்தொடர்பு துறை நிறுவனங்கள் நிதி நெருக் கடியில் உள்ள நிலையில் அலைக் கற்றை ஏலம் நடத்துவது சரியாக இருக்காது என்று கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்