பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலக வங்கி ரூ. 14 லட்சம் கோடி முதலீடு

By செய்திப்பிரிவு

பருவநிலை மாற்றம் உலகம் முழுதும் மிகப்பெரும் அச்சுறுத் தலை உண்டாக்கியுள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள உலக வங்கி 2021-2025 ஆகிய ஐந்து ஆண்டுகளில் ரூ. 14 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் பருவநிலை மாற்றம் குறித்த அச்சத்தில் உள்ளன. புவிவெப்பமய மாதலும், காற்று, நீர், நில மாசுபா டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு உயிரினங்கள் அழியும் நிலை உண்டாகியுள்ளது. மனித குலத் துக்கும் அச்சுறுத்தலாக பருவநிலை மாற்றம் உள்ளது. எனவே பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் முனைப்பில் உலக நாடுகள் உள்ளன.

ஐநாவின் பருவநிலை மாற்ற மாநாடு போலந்தில் நடைபெற்றது. 200 நாடுகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் உலக வங்கி 2021 முதல் 2025 வரையிலான ஐந்து ஆண்டு களில் பருவநிலை மாற்றத்தை எதிர் கொள்ள ரூ. 14 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள் ளது. இதில் ரூ. 7 லட்சம் கோடி உலக வங்கியிலிருந்து நேரடியாக ஒதுக்கப்படும் எனக் கூறியுள் ளது.

இதுகுறித்து உலக வங்கியின் பருவ நிலை மாற்றத்துக்கான மூத்த இயக்குநர் ஜான் ரூமி கூறியதா வது, நாம் புகை வெளியிடுவதைக் குறைக்க வேண்டும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகை யிலான கட்டமைப்புகளை உரு வாக்க வேண்டும்.

இல்லாவிட்டால் 2030ல் 10 கோடிக்கும் மேலான மக்கள் ஏழ்மையில் வாழ்வார்கள். மேலும் பருவநிலை மாற்றத்தில் குறைவாக கவனம் செலுத்தினால் ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா, லத்தின் அமெரிக்கா பகுதிகளி லிருந்து 13 கோடி மக்கள் பருவ நிலை மாற்றத்துக்காக இடம்பெய ரும் நிலை உண்டாகும்.

எனவே அனைத்து நாடுகளும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இணைந்து ஒத்துழைக்க வேண் டும்”என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

இந்தியா

26 mins ago

சினிமா

43 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

மேலும்