அமெரிக்காவைக் காட்டிலும் இந்தியாவில் நிதி நிறுவனங்களில் நடக்கும் மோசடி 2 மடங்கு உயர்வு

By செய்திப்பிரிவு

அமெரிக்காவைவிடவும் இந்தியாவில் நிதி நிறுவனங்களில் நடக்கும் மோசடி இரண்டு மடங்கு அதிகரித்து ள்ளது. கடந்த 12 மாதங்களில் இந்திய நிதி நிறுவனங்களின் மோசடி, அமெரிக்க நிறுவனங்களின் மோசடியைவிட இரண்டு மடங்கு அதிகமாக நிகழ்ந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ட்ரான்ஸ் யூனியன் சிபில் என்ற நிறுவனம் இந்திய நிறுவனங்களில் நடக்கும் தகவல் மற்றும் நிதி மோசடிகள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் 62 சதவீத இந்திய நிறு வனங்களில் மோசடி நடப்பதைத் தடுப்பதற்கான தொழில்நுட்ப வசதி கள் பலவீனமாக இருப்பதாகவும், மோசடி நடக்கும் சமயத்தில் அதற்கு உடனடியாகத் தீர்வு காண் பதற்கான திறன் இல்லாமல் இருப்ப தாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

இந்தியா, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் ட்ரான்ஸ் யூனியன் சார்பாக ‘ஃபாரெஸ்டர்’ நடத்திய ஆன்லைன் சர்வே முடிவு களை வைத்து இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 12 மாதங்களில் அமெரிக்க நிறுவனங்களைக் காட்டிலும் இந் திய நிதி நிறுவனங்களில் 2 மடங்கு அதிகமாக மோசடிகள் நிகழ்ந்துள்ள தாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து டிரான்ஸ் யூனியன் சிபில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், சிஇஓ சதீஷ் பிள்ளை கூறியதாவது, இந்திய நிறுவனங்களில் குறிப்பாக நிதி சேவை மற்றும் காப்பீடு நிறுவனங் களில், வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவை அனுபவத்தைத் தரும் அதே சமயம் மோசடிகளை எதிர்கொள்வதற்கான முடிவுகளை எடுப்பதில் பெரிய அளவில் சிக்கல் இருப்பது தெளிவாக தெரிகிறது.

நுகர்வோர்கள் சிறப்பான அதே சமயம் பாதுகாப்பான சேவையை எதிர்பார்க்கிறார்கள். அதை வழங்க முடியாத நிறுவனங்கள் போட்டி நிறுவனங்களிடம் தோற்றுப் போகும் நிலை ஏற்படும் என்றார்.

ஏனெனில் 75 சதவீத நிதி நிறு வனங்களின் முதலீட்டின் மீதான வருவாய்க்குப் பிரதானமாக உள்ள காரணி அவை வழங்கும் மோசடி தடுப்பு மற்றும் அடையாள உறுதி செய்தல் சேவையின் மூலம்தான்.

ஆனால் இன்ஷூரன்ஸ் நிறு வனங்களில் உள்ள பெரிய பிரச் சினை இந்த அடையாள சரிபார்ப்பு என்பது பலவீனமாக இருப்பதுதான். இதன் மூலம் இன்ஷூரன்ஸுக்கு விண்ணப்பிப்பதிலிருந்து, கிளெய்ம் பெறுவது வரை பல்வேறு மோசடிகளை எளிதில் நிகழ்த்திவிடுகிறார்கள்.

எனவே நிதி நிறுவனங்களும், காப்பீடு நிறுவனங்களும், தங் களது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்வது, அடை யாள சரிபார்ப்பில் மோசடி களைக் கண்டறிவது, பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் சிறப்பாக் குவது போன்றவற்றை வழங்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுடைய புகார்களுக்கு சரியான விசாரணையும் வழங்கப் பட வேண்டும் என்று கூறி னார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

ஓடிடி களம்

33 mins ago

தமிழகம்

12 mins ago

வணிகம்

45 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

15 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்