தாராவியை மேம்படுத்த சர்வதேச டெண்டர்: மகாராஷ்டிர அரசு அழைப்பு

By செய்திப்பிரிவு

ஆசியாவின் மிகப்பெரிய குடி சைப் பகுதிகளில் ஒன்றான மும்பையிலுள்ள தாராவியை மேம்படுத்தும் திட்டத்துக்கு சர்வதேச அளவில் டெண்டர் அழைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர அரசின் குடிசைப் பகுதி மேம்பாட்டு நிறுவனம் மும்பையிலுள்ள தாராவியை மேம்படுத்தும் திட்டத்துக்கான டெண்டரை அறிவித்துள்ளது. ரூ. 22 ஆயிரம் கோடி மதிப்பில் தாராவி மேம்படுத்தப்பட உள்ளதாகக் கூறி யுள்ளது. தாராவியின் மேம்பாட்டு திட்டத்துக்கு சர்வதேச அளவில் டெண்டர் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

2004 லிருந்தே தாராவி குடிசைப் பகுதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின் றன. ஆனால், அதற்கான எந்த முயற்சிகளும் வெற்றிபெற வில்லை. காரணம், மும்பையின் மையப் பகுதியான தாராவியில் 535 ஏக்கரில் பெரும்பான்மை மக்கள் வசித்துவருகின்றனர். சுமார் 60 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் டெண்டர் எடுப்பவர்கள் தகுதியுடைய குடிசைவாழ் மக்களுக்கு குடியிருப்பு வீடு கட்டித்தரவும், மேலும் குடியிருப்புகள் கட்டி திறந்த சந்தையில் விற்பனை செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்தத் திட்டம் குறித்து ரியல் எஸ்டே நிறுவனங்கள் கூறுகையில், இது மும்பையின் ரியல் எஸ்டேட் தொழிலை மேம்படுத்தும் என்பதோடு, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் இலக்கை அடையவும் வழிவகுக்கும் என்று கூறுகின்றன. ஆனால், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்றும் சொல்கிறார்கள். இந்த மேம்பாட்டு திட்டத்துக்கான டெண்டருக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி டிசம்பர் 28 என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

மேலும்