பணமதிப்பு நீக்கம் உயர் நெறி சார்ந்த நடவடிக்கை: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கருத்து

By செய்திப்பிரிவு

மத்திய அரசு 2016-ம் ஆண்டு மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது உயர் நெறி சார்ந்த நடவடிக்கை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார். இது அரசியல் நோக்கத்தில் எடுக்கப் பட்ட நடவடிக்கை என்ற எதிர்க்கட்சி களின் குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக மத்திய பிரதேச மாநி லத்தில் நடைபெற உள்ள தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரிடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல்களுக் கிடையே ஜேட்லி இக்கருத்தை தெரிவித்துள்ளது மிகுந்த முக்கியத் துவம் பெறுகிறது. ஜேட்லி மேலும் கூறியதாவது:

பணமதிப்பு நீக்க நடவடிக் கைகைக்குப் பிறகு வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதி கரித்துள்ளது. இதன் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரு மானம் கணிசமாக உயர்ந்துள்ளது என்றார்.

இந்தியாவில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழல் பணமதிப்பு நீக்கம் தான் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை யால் மக்களுக்கு எவ்வித பிரச்சி னையும் ஏற்படவில்லை. ஆனால் ஒரு குடும்பத்தினரால் மட்டுமே பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார்.

காங்கிரஸ் கட்சி பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து கவலைப் படுவதற்குக் காரணமே அவர்க ளும் அவர்கள் நண்பர்களும் மெத் தைக்கு அடியில் பதுக்கி வைத்தி ருந்த பணம் முழுவதையும் ஒரே உத்தரவில் செல்லாததாக்கிவிட் டோம் என்பதுதான். பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் பெறப் பட்ட பணம் முழுவதும் பொதுப் பணிக்காவும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப் பட்டதாக மோடி சுட்டிக்காட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்