தொழிலதிபர் விஜய் மல்லையாவின் 6 சொகுசு கார்கள் இங்கிலாந்தில் ஏலம்: வாராக்கடனை மீட்க நடவடிக்கை

By செய்திப்பிரிவு

விஜய் மல்லையா 13 இந்திய வங்கிகளிடமிருந்து வாங்கிய ரூ. 9 ஆயிரம் கோடி கடனை மீட்க கைப்பற்றிய அவருடைய கார் கள் இங்கிலாந்தில் ஏலம் விடப்பட உள்ளன. இங்கிலாந்து உயர் அமலாக்கப்பிரிவு அதிகாரி இந்த ஏல விற்பனையைச் செயல் படுத்தவுள்ளதாகக் கூறப்பட் டுள்ளது.

விஜய் மல்லையா இந்திய வங்கி களிடமிருந்து ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு லண்டனுக் குத் தப்பிச்சென்று தலைமறைவா னார். அவரை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகளில் அரசு, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அவர் தரவேண்டிய கடனை மீட்க அவ ரது சொத்துகளைக் கைப்பற்றி ஏலத் தில் விற்பனை செய்ய திட்டமிடப் பட்டது. இந்தியாவில் அவருடையச் சொத்துகளை வாங்க பெரிய அள வில் யாரும் ஆர்வம் காட்டவில்லை.

இதனால் அவருடைய ஆறு கார்களை இங்கிலாந்தில் ஏலம் விட முடிவுசெய்யப்பட்டது. கடந்த மே மாதம் இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து நடந்த விசாரணையில் சாதகமான தீர்ப்பை யும் நீதிபதி வழங்கினார். டிஎல்டி என்ற சட்ட நிறுவனம் இந்திய வங்கிகளுக்காக இந்த வழக்கில் வாதாடி வெற்றிபெற்றது. இதற் கான அமலாக்க உத்தரவு கடந்த வாரம் தரப்பட்ட நிலையில் தற் போது விஜய் மல்லையாவின் கார்களை இங்கிலாந்தில் ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஏலம் விடப்படவுள்ள கார்கள்: 2016 மினி கன்ட்ரிமேன் (AD16 1YX); 2012 மேபேக் 62 (VJM1); 2006 பெராரி எப்430 ஸ்பைடர் (B055 VJM); 2014 ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி சூப்பர் சார்ஜ்டு (F1 VJM); பராரி எப்512எம் (M811 VGR); போர்ஷே கேயென் (OO07 VJM).

வழக்குகளை தனி ஆளாக இருந்து எதிர்கொண்டு வருகி றார் விஜய் மல்லையா. வரும் டிசம்பர் 10ல் லண்டன் வெஸ்ட்மின் ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையில் வரும் தீர்ப்பைப் பொறுத்து இந்தியாவுக்கு அனுப்பப்படுவாரா இல்லையா என்பது தெரியவரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்