ராணா கபூரின் போனஸை திரும்பப்பெற முடிவு: யெஸ் வங்கி இயக்குநர் குழு கூட்டத்தில் முடிவு

By செய்திப்பிரிவு

யெஸ் வங்கியின் நிர்வாக இயக் குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராணா கபூருக்கு வழங்கப் பட்ட போனஸ் தொகைகளைத் திரும்பப்பெற யெஸ் வங்கியின் இயக்குநர் குழு முடிவு செய் துள்ளது. மேலும் புதிய தலைமை செயல் அதிகாரியை நியமிக்க டிசம்பர் 15ஐ கெடு தேதியாக அறிவித்துள்ளது.

2004ல் தொடங்கப்பட்டதி லிருந்து இதுவரையிலும் யெஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதி காரியாக இருந்துவருகிறார் ராணா கபூர். இவரது பதவிக் காலம் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், இவரது பதவிக்காலத்தை மேலும் மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்குமாறு யெஸ் வங்கி இயக்குநர் குழு ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்திருந்தது.

யெஸ் வங்கியின் இந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்ட ரிசர்வ் வங்கி, நிதி அறிக்கையில் இரண்டு நிதி ஆண்டுகளாக ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பிலான கணக்குகளில் முரண்பாடுகள் இருப் பதையும், வங்கியின் கடன் புத் தகத்தில் நிர்வாக முறைகேடுகள் நடந்திருப்பதையும் சுட்டிக் காட்டியது. இந்தக் காரணங்களை முன்வைத்து ராணா கபூரின் பதவிக் காலத்தை 2019 ஜனவரி 31 வரை மட்டுமே நீட்டிக்க அனுமதித்தது.

ரிசர்வ் வங்கியின் பதவிக்கால நீட்டிப்பு குறித்த தகவல் வெளியான போது, பங்குவர்த்தகத்தில் இதன் பங்குகள் மளமளவென சரிவைக் கண்டன. ஒரே நாளில் 30 சத வீதத்துக்கு மேல் சரிந்தன.

மேலும் யெஸ் வங்கி புதியவர் ஒருவரை நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பொறுப் புக்குத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது.

இந்நிலையில் யெஸ் வங்கியின் இயக்குநர் குழு, சிஇஓ ராணா கபூருக்கு 2014-15, 2015-16 ஆகிய நிதி ஆண்டுகளில் வழங்கிய போனஸ் தொகைகளைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. மேலும் 2016-17, 2017-18 நிதி ஆண்டுகளில் அவருக்கு எந்த போனஸும் வழங் கப்படக்கூடாது என்றும், 2018-19 நிதி ஆண்டுக்கான போனஸ் தொகை வழங்குவதற்கான செயல் முறைகளை நிறுத்தவும் பரிந் துரை செய்துள்ளது. இந்தப் பரிந்து ரைகளைச் செயல்படுத்த ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கோரியுள் ளது. ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கும்பட்சத்தில் இதனை வங்கி செயல்படுத்தும்.

டிசம்பர் 15-க்குள் புதிய சிஇஓ

வங்கியின் இயக்குநர் குழு புதிய நபரை தேடும் பணியையும் தொடங்கியுள்ளது. வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பொறுப் புக்குப் புதிய நபரைத் தேர்ந் தெடுக்க உள்ளது.

ஏற்கெனவே பரிந்துரைக்கப் பட்ட மூன்று நபர்கள், இயக்கு நர் குழுவில் உள்ள உறுப்பினர் கள் மற்றும் வெளியிலிருந்து இரண்டு நபர்கள் என பரிந்துரை பட்டியலில் உள்ளனர். புதிய நபரை தேர்வு செய்ய சிறப்பு குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. புதியவரைத் தேர்வு செய்வதில் உதவுவதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த கோர்ன் ஃபெர்ரி என்ற ஆலோசனை நிறுவனத்தை நிய மித்துள்ளது.

பதவியிலிருந்து விலகினாலும் தொடர்ந்து இயக்குநர் குழுவில் தொடர்வேன் என்றும், வங்கியின் வளர்ச்சிக்காக ஆலோசனைகளை வழங்குவேன் என்றும் ராணா கபூர் கூறியிருந்தார்.

ஆனால், இயக்குநர் குழுவில் இவர் தொடர்வாரா இல்லையா என்பது குறித்து இயக்குநர் குழு தெளிவாக தெரிவிக்கவில்லை. ராணா கபூர் வசம் வங்கியின் 10.66 சதவீத பங்குகள் உள்ளன. இந்தப் பங்குகளை விற்க மாட்டேன் என்று அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ராணா கபூர் வசம் வங்கியின் 10.66 சதவீத பங்குகள் உள்ளன. இந்தப் பங்குகளை விற்க மாட்டேன் என்று அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்