அரசு கொண்டுவந்த சீர்திருத்தங்களால் இந்திய பொருளாதாரம் வலுவடைந்துள்ளது: பொருளாதார விவகாரத்துறைச் செயலர் எஸ்.சி. கார்க் கருத்து

By செய்திப்பிரிவு

இந்தியாவில் வரி சீர்திருத்தம் மற்றும் திவால் மசோதா உள்ளிட்ட நடவடிக்கைகளால்  பொருளாதாரம் வலுவடைந்துள்ளது. இதன் காரணமாகத்தான் சர்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார தாக்கங்கள் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கவில்லை என்று பொருளாதார விவகாரத்துறைச் செயலர் சுபாஷ் சந்திர கார்க் கூறினார்.

மிகவும் இக்கட்டான, கடுமையான சூழலுக்கிடையே இந்திய பொருளாதாரம் வளர்ச்சியையும் எட்டி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.

அரசு எடுத்த சில சிக்கன நடவடிக்கைகள் நாட்டின் நிதி  நிலையை ஸ்திரப்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்வுக்கேற்ப எடுக்கப்பட்ட நடவடிக்கை உள்ளிட்டவற்றை அவர் சுட்டிக் காட்டினார்.

சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) ஆண்டுக் கூட்டம் இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்ட அவர், மின்னணு தொழில்நுட்ப மாற்றமானது மிகவும் அடிப்படையான மாற்றமாகும். தொழில் புரட்சிக்கு நீராவி என்ஜின் கண்டுபிடிப்பு எப்படி வித்திட்டதோ அதைப் போன்றது என்று குறிப்பிட்டார்.

டிஜிட்டல் புரட்சியானது உலகில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது என்று அவர் மேலும் கூறினார்.

வர்த்தகப் போர் மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் ஆகியவை வளரும் நாடுகளை வெகுவாக பாதிக்கும் விஷயமாகும். இதன் தாக்கம் குறைவாக இருக்க வேண்டுமெனில் ஒருங்கிணைந்து செயல்படுவது சிறந்த பலனை அளிக்கும் என்றார்.

கட்டமைப்புத் துறையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காகவே ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் ஃபன்ட் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. அதேபோல கட்டமைப்பு கடன் நிதியமும் உருவாக்கப்பட்டுள்ளது என்று கார்க் குறிப்பிட்டார். எந்தத் துறைகளில் முதலீடுகளை ஈர்க்க வேண்டுமோ அதில் சர்வதேச தரத்தை உறுதி செய்ய வேண்டும். அதற்கான முயற்சிகளை இந்தியா எடுத்துள்ளது என்றார்.

தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தேசிய ஏற்றுமதி காப்பீட்டு நிதியம் மற்றும் சலுகை நிதி ஏற்பாடு உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன. இவ்விரு நிதியமும் ஆப்பிரிக்காவில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டவை என்று அவர் குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

6 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்