தீபாவளி சீசனால் தங்கம் விலை உயர்வு

By செய்திப்பிரிவு

கடந்த மாதம் ரூபாய் மதிப்பு மிக மோசமான சரிவைச் சந்தித்தது. ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்தது. இதனையடுத்து ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை எடுத்தது.

இதனால் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவது சற்று கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் ரூபாய் மதிப்பில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் நீடித்து வருகிறது. இதன் எதிரொலியாக தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

இதனுடன், திருமணம் மற்றும் தீபாவளி சீசன் தொடங்கியுள்ளதால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்றைய விலையை ஒப்பிடுகையில் பவுனுக்கு 288 ரூபாய் உயர்ந்து 24 ஆயிரத்து 456 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் நேற்றைய விலையில் இருந்து 36 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 57 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

15 mins ago

சினிமா

28 mins ago

விளையாட்டு

34 mins ago

சினிமா

40 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

46 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்