போர்ப்ஸின் இந்தியப் பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு: 11 ஆண்டுகளாக முதலிடத்தில் அம்பானி

By செய்திப்பிரிவு

போர்ப்ஸ் இதழின் இந்த ஆண்டுக் கான இந்தியப் பணக்காரர்கள் பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித் துள்ளார் முகேஷ் அம்பானி. இதன் மூலம் தொடர்ந்து 11-வது ஆண் டாக முதலிடத்தைத் தக்கவைத் துள்ளார்.

போர்ப்ஸ் இதழ் ஒவ்வோராண் டும் வெளியிடும் பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இந்தியப் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தை முகேஷ் அம்பானி தக்கவைத்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் உரிமையாளரான இவருடைய தற்போதைய சொத்து மதிப்பு ரூ. 3.5 லட்சம் கோடியாக உள்ளது. தொடர்ச்சியாக 11 ஆண்டு களாக முதலிடத்தில் அசைக்க முடியாதவராக தொடர்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு மட்டும் அவரது சொத்து மதிப்பு ரூ. 70 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது. இந்தவகையிலும் முதலிடத்தில் இவரே உள்ளார்.

இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் விப்ரோவின் அசிம் பிரேம்ஜி ரூ. 1.5 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தை தக்கவைத்துள்ளார். ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தின் தலைவர் லட்சுமி மிட்டல் ரூ. 1.3 லட்சம் கோடி சொத்துடன் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஹிந்துஜா சகோதரர்கள் நான் காம் இடத்திலும், பாலோன்ஜி மிஸ்திரி ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்