இந்திய ரூபாய் மதிப்பு மிகப்பெரிய வீழ்ச்சி: கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி

By செய்திப்பிரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று, இதுவரை இல்லாத அளவு கடுமையாக சரிந்தது. முதன்முறையாக ஒரு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது.

துருக்கியின் பொருளாதார சரிவின் காரணமாக அதன் நாணயமான லிரா கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் அண்மைகாலமாக உலக அளவில் டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினை கண்டுள்ளன. இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டது.

அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியது. இதனால் கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்தநிலையில் இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று காலை நிலவரப்படி பேரல் ஒன்று 78 டாலர்களாக உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் பணவீக்கம் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்பு, இந்திய ரூபாய் மதிப்பில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இன்று காலை நேர வர்த்கத்தில் இதவரை இல்லாத அளவு மிகமோசமான சரிவை இந்திய ரூபாய் சந்தித்தது. இந்திய ரூபாய் மதிப்பு நேற்றைய வர்த்தகதில் 70.84 ரூபாயாக சரிந்த நிலையில் இன்று காலை வர்த்தகத்தில் 70.95 ரூபாயாக வீழ்ச்சியடைந்தது. தினசரி வர்த்தகத்தில் 71 ரூபாயாக சரிவடைந்தது. இந்த ஒரு மாதங்களில் நடந்த சரிவு என்பது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத ஒன்றாகும்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 71 ரூபாயாக உயர்ந்தது. இதனால் ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

59 mins ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்