வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற 28 பொருளாதார குற்றவாளிகள்: வெளியுறவு அமைச்சகம் தகவல்

By செய்திப்பிரிவு

இந்தியாவைச் சேர்ந்த 28 பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.  வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள விவரங்களில் இது தெரிய வந்துள்ளது.

இந்த 28 பொருளாதார குற்றவாளிகளை இந்தியாவுக்கு திரும்ப கொண்டுவருவதற்கான சட்ட நடவடிக்கைகளை மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

இந்த 28 நபர்களில் 8 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2015-ம் ஆண்டிலிருந்து வெளிநாடுகளில் வசிக்கும் இவர்கள் மீது குற்ற வழக்குகள் மற்றும் பொருளாதார மோசடி சட்டங்களின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பட்டியலில் உள்ள குற்றவாளிகள்

புஷ்பேஷ் பெய்ட், ஆஷிஷ் ஜோபன்புத்ரா, விஜய் மல்லையா, சுனய் கல்ரா, சஞ்சய் கல்ரா, சுதிர் குமார் கல்ரா, ஆர்த்தி கல்ரா, வர்ஷா கல்ரா, ஜதின் மேத்தா, உமேஷ் பரேக், கமலேஷ் பரேக், நிலேஷ் பரேக், எகல்வியா கார்க், வினய் மிட்டல், சேட்டன் ஜெயந்திலால் சந்தேசரா,  நிதின் ஜெயந்திலால் சந்தேசரா,  தீப்திபென் சேட்டன்குமார் சந்தேசரா,  நீரவ் மோடி,  நிஷால் மோடி, மெகுல் சோக்ஸி, சப்யா சேத், ராஜிவ் கோயல், அல்கா கோயல், லலித் மோடி, ரிதேஷ் ஜெயின், ஹிதேஷ் நரேந்திரபாய் படேல்,  மயூரிபென் படேல், பிரீத்தி ஆஷிஷ் ஜோபன்புத்ரா.

பொருளாதார குற்றவாளிகள் மீது நாடு கடத்தும் நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 48 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஓடிடி களம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்