குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்காதது ஏன்?- வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

பேஸ்புக் நிறுவனம் செயல்படுத்தி வரும் வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்காதது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகியவை நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வாட்ஸ்அப் மூலம் வதந்திகள் பரப்பப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கிறிஸ் டேனி யல்ஸை மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வலியுறுத்தியிருந்தார். கடந்த வாரம் தம்மை சந்தித்த கிறிஸ் டேனியல்ஸிடம் அவர் இக்கருத்தை வலியுறுத்தியிருந்தார். அத்துடன் நிறுவனத்துக்கு குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்குமாறும் வலியுறுத்தியிருந்தார். வாட்ஸ்அப் மூலம் வதந்திகள் பரவியதால் நாட்டின் பல பாகங்களில் வன்முறை கள் பெருகி உயிரிழப்புகளும் நிகழ்ந் துள்ளன. இதையடுத்து வாட்ஸ்அப் தலைமைச் செயல் அதிகாரியை அழைத்து மத்திய நிதி அமைச்சகம், தகவல் அனுப்புவோர் பற்றிய விவரத்தை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது. இந்தியாவில் மையம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது.

ஆனால் அந்த சந்திப்பின்போது டேனியல்ஸ் எந்த கருத்தும் தெரி விக்கவில்லை. ஆனால் அடுத்த இரண்டு நாள்களில், வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்புவோர் விவ ரத்தை கண்டுபிடிக்க முடியாது என் றும், அத்தகைய தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்தால் அது தகவல் பரிவர்த்தனையில் உள்ள சுதந்திரத் தன்மையை பறிப்பதாக அமைந்துவிடும் என தெரிவித்திருந்தது. அரசின் பிற கோரிக்கைகளை வாட்ஸ்அப் நிறுவனம் ஏற்றுக் கொண்டது.

இந்தச் சூழலில் உச்ச நீதி மன்றம் வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மட்டுமின்றி இரண்டு அமைச்சகங் களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள் ளது இந்த விவகாரத்தில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

7 hours ago

மேலும்