2020 ஏப்ரல் 1-ம் தேதிக்கு பின்னர் பாரத் 6 விதிகளை பூர்த்தி செய்யாத வாகனங்களுக்கு அனுமதியில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

பாரத் 6 விதிகளை பூர்த்தி செய் யாத வாகனங்களை 2020 ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உற்பத்தி செய்வ தற்கும் தடை செய்துள்ளது. பாரத் 6 விதிமுறைப்படி தயாரிக்கப்படும் வாகனங்களால் சுற்றுச் சூழல் மாசுபடுவது குறையும் என்பதால் உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கில் மத்திய பெட் ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், தனி யார் வாகன விற் பனையை பொறுத்த வரையில் டீசல் வாகனங்களுக்கான விலையை அதிகப்படுத் தவோ, அல்லது எரிபொருள் சார்ந்து வாகனங்களின் விலையை வேறுபடுத்தவோ சாத்தியமில்லை என்று குறிப்பிட்டிருந்தது.

நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அமர்வில் அமைச்சகம் தனது தரப்பு வாதங்களை முன்வைத்தது. பாரத் 6 விதிகள் படி வாகனங்களை தயாரிக்கவோ விற்பனை செய் யவோ 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு பின்னர் அனுமதிப் பதில்லை என அரசு முடிவு செய் துள்ளது. பாரத் 6 எரிபொருளை உருவாக்க இதுவரை ரூ.28,000 கோடி முதலீடு மேற்கொள்ளப்பட் டுள்ளது என்று குறிப்பிட்டது.

மத்திய அரசின் சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ என் எஸ் நட்கர்னி ஆஜரானார். அவர் கூறுகையில், பிஎஸ் 4 விதிமுறைகள்படி தயாரிக்கப்பட்ட வாகனங்களை 2020-ம் ஆண்டு ஜூன் வரை பதிவு செய்யலாம். மார்ச் 2020 வரை தயாரிக்கலாம் என்று குறிப்பிட்டார்.

அதேநேரத்தில் 2020-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின்னர் பாரத் 6 விதிகளை கடைபிடிக்காத வாகனங்கள் அனுமதிக்கக்கூடாது என்று நட்கர்னி கூறினார்.

பின்னர் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் கருத்தைக் கேட்ட நீதிபதிகள், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்று கேட்டனர். இதனையடுத்து நீதிபதிகள் பாரத் 6 விதிமுறைகளை பூர்த்தி செய்யாத வாகனங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

கல்வி

49 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்