ஐரோப்பிய யூனியன் வரி விதிப்பால் ஸ்டீல் ஏற்றுமதியில் இந்தியாவுக்கு பாதிப்பு-உருக்குத் துறை செயலர் தகவல்

By செய்திப்பிரிவு

ஐரோப்பிய யூனியன் ஸ்டீல் இறக்குமதிக்கான வரியை உயர்த்துவதால் இந்தியாவுக்கு பாதிப்புகள் ஏற்படும் என உருக்குத் துறை செயலர் அருணா ஷர்மா தெரிவித்துள்ளார். அசோசேம் கூட்டமொன்றில் கலந்துகொண்டபொழுது அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். இருப்பினும் ஸ்டீல் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியுள்ளதால் இந்தியாவுக்கு உடனடி பாதிப்புகள் ஏற்படாது என அருணா ஷர்மா தெரிவித்துள்ளார். அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் ஸ்டீல் பொருட்களின் அளவு மிகவும் குறைவு என்றும் அவர் குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,

அமெரிக்காவுக்கு 0.9 மில்லியன் டன்னை விடக் குறைவாகத்தான் ஏற்றுமதி செய்கிறோம். எனவே அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பு உயர்வால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.

ஐரோப்பிய யூனியனுக்கு 6 சதவீதம் அளவுக்கு ஸ்டீல் பொருட்களை நாம் ஏற்றுமதி செய்துவருகிறோம். எனவே அமெரிக்காவைப் போல ஐரோப் பிய யூனியனும் வரி விதிப்பை அதிகரிப்பதால் இந்தியாவுக்கு பாதிப்புகள் ஏற்படும். வரி விதிப்பை அதிகரிக்க கடந்த 3 ஆண்டுகளின் சராசரி இறக்குமதியை ஐரோப்பிய யூனியன் கணக்கில் எடுத்துக்கொள்ள இருக்கிறது. 2015-ம் ஆண்டு உலக அளவில் ஸ்டீல் துறைக்கு சிறப்பான ஆண்டு அல்ல. எனவே 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளை மட்டுமே வரி விதிப்பை அமல்படுத்துவதற்கான கணக்கீட்டு ஆண்டுகளாக ஐரோப்பிய யூனியன் எடுத்துக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறோம். செப்டம்பர் 14 அன்று இதுகுறித்த விசாரணை நடைபெறும் என அருணா ஷர்மா தெரிவித்தார்.

கடந்த மூன்று ஆண்டு சராசரியைவிட அதிகமாக ஸ்டீல் பொருட்கள் ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டால் 25 சதவீதம் அளவுக்கு வரி செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

34 mins ago

சினிமா

54 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

30 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்