அசோக் லேலண்ட் - ஹெச்பிசிஎல் எரிபொருள் அட்டை அறிமுகம்

By செய்திப்பிரிவு

அசோக் லேலண்ட் நிறுவனம் , ஹெச்பிசிஎல் நிறுவனத்துடன் இணைந்து என் -தன் எரிபொருள் அட்டையை அறிமுகம் செய்துள்ளது. எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனத்துடன் இணைந்து வாகன உபகரணங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் எரிபொருள் அட்டையை அறிமுகம் செய்வது இதுதான் முதல்முறை என இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. இந்த அட்டையை ஹெச்பிசிஎல் எண்ணெய் நிலையங்களில் பயன்படுத்துவதன் மூலம் சிறப்புப் புள்ளிகளைப் பெற முடியும். இந்தப் புள்ளிகளைப் பயன்படுத்தி பெட்ரோல் அல்லது டீசலை நிரப்புதல், அசோக் லேலண்டின் வாகன சேவைகளைப் பெறுதல் போன்ற பல்வேறு சலுகைகளைப் பெறமுடியும்.

இந்த பிரீபெய்ட் அட்டையைப் பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை ஒரு லாரியின் எரிபொருள் செலவை சேமிக்கமுடியும் என அசோக் லேலண்ட் மேலாண்மை இயக்குநர் விநோத் கே.தாசரி கூறினார். அசோக் லேலண்ட் டீலர் அலுவலகங்கள் மற்றும் ஹெச்பிசிஎல் எண்ணெய் நிரப்பு நிலையங்களில் இந்த அட்டை இலவசமாகக் கிடைக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

28 mins ago

ஜோதிடம்

31 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்