பஞ்சாப் நேஷனல் வங்கியில் மத்திய கடன் பரிசீலனை பிரிவு தொடக்கம்

By செய்திப்பிரிவு

நிதி மோசடியில் சிக்கி பெரும் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி, கடன் வழங்கும் முறையில் மத்திய கடன் பரிசீலனை பிரிவை (சிஎல்பிசி) ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் கடன் வழங்குவதில் ஒளிவுமறைவற்ற தன்மையை உருவாக்கவும், ஸ்திரத்தன்மை ஏற்படுவதுடன், நிதி மோசடிகளையும் தடுக்க முடியும் என்று வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.

`மிஷன் பரிவர்தன்’ எனும் புதிய திட்ட இலக்கின்கீழ் இந்த கடன் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இது தவிர, ஆர்ஐஆர்ஓ எனப்படும் புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கடன் வழங்கும் செயல்பாடுகளிலும், கடன் வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டமானது குறிப்பிட்ட கால வரையறைக்குள் அதாவது கடன் ஒப்புதல், கடன் அனுமதி ஆகியவற்றை நிர்ணயித்து அதற்குரிய பொறுப்பானவர்களையும் உருவாக்கியுள்ளது. இதன்படி கடன் வழங்குவது விரைவாக நடைபெறுவதோடு அதை தீவிரமாக கண்காணிக்கவும் வழியேற்படும்.

ஆர்ஐஆர்ஓ எனப்படும் மேம்பட்ட தொழில்நுட்ப உதவியால் வாடிக்கையாளர் மற்றும் பணியாளர்களிடையிலான தொடர்பு நெருக்கமாவதோடு செயல்பாடுகளும் மேம்படும் என்று வங்கியின் மேலாண்மை இயக்குநர் சுநீல் மேத்தா கூறினார். மிகவும் இக்கட்டான தருணங்களிலும் வங்கியின் சேமிப்பு விகிதம் வளர்ச்சியடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்