சில்லரை பணவீக்கம் 4.87 சதவீதமாக உயர்வு

By செய்திப்பிரிவு

மே மாத சில்லரை பணவீக்கம் 4.87 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 4.58 சதவீதமாக இருந்தது. பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை ஏற்றத்தின் காரணமாக பணவீக்கம் உயர்ந்திருக்கிறது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வும் ஒரு காரணமாகும். அதே சமயத்தில் பருப்பு மற்றும் சர்க்கரை விலை குறைந்திருக்கிறது. ஆனால் இந்த விலைகுறைவுகள் சில்லரை உணவு பணவீக்கத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அதே சமயத்தில் ஏப்ரல் மாத தொழில் உற்பத்தி 4.9 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதம் 4.4 சதவீதமாக குறைந்திருந்த நிலையில், தற்போது சிறிதளவு உயர்ந்திருக்கிறது. ஏப்ரல் மாதம் உற்பத்தி துறை மற்றும் சுரங்க துறையில் வளர்ச்சி இருந்தது. டிசம்பரில் 7.1 சதவீதமாகவும், ஜனவரியில்7.4 சதவீதமாகவும், பிப்ரவரியில் 7 சதவீதமாகவும் இருந்த தொழில் உற்பத்தி மார்ச் மாதம் 4.4 சதவீதமாக சரிந்தது. தற்போது உயரத்தொடங்கி இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்