தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் யுனிபோர்

By செய்திப்பிரிவு

சென்னையை தலைமையிடமாகக் கொண்ட யுனிபோர் சாப்ட்வேர் சிஸ்டம்ஸ் நிறுவனம் தனது குரல் வழி சேவைகளை மேம்படுத்தும் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. குரல் வழியாக விவசாயம், வேலைவாய்ப்பு, நிதி சார்ந்த சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் இந்த நிறுவனம் 2008-ம் ஆண்டு சென்னை ஐஐடி-யில் உருவாக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். இது தொடர்பாக நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான யுமேஷ் சசதேவ் கூறியது:

வாடிக்கையாளர்களின் குரல் அடையாளத்தின் அடிப்படையில் சேவைகளை வழங்குவதில் தற்போது உலக அளவில் குறிப்பிடத்தக்க சந்தையை வைத்துள்ளோம்.

பயோமெட்ரிக் அடிப்படையில் அடையாளம் காண்பது போல குரலை அடிப்படையாக வைத்து அடையாளம் காண முடியும். இணைய இணைப்பு இல்லாத இடங்களிலும் இதன் மூலம் சரியான நபர்களை அடையாளம் காண முடியும். 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மூன்று கட்டமாக நிதி திரட்டியுள்ளோம்.

ஜான் சேம்பர்ஸ், கிரிஸ் கோபாலகிருஷ்ணன், ஐஐஎப்எல், இந்தியன் ஏஞ்செல் நெட்வொர்க் போன்ற தீவிரமான தொழில்நுட்ப முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டியுள்ளோம்.

தற்போது அளித்துவரும் அவ் மினா, அகிரா, அம் வாய்ஸ் சேவைகளை இந்தியாவில் 17 மொழிகளில் அளித்துவருகிறோம். இதன் மூலம் இந்தியாவில் முதன்மையான நிறுவனமான உள்ளோம். தெற்காசிய அளவிலும், ஆசிய அளவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்து வருகிறோம். அடுத்த மூன்று ஆண்டுகளில் 20 மில்லியன் டாலர் வருமான எதிர்பார்ப்பு உள்ளது. நிறுவனம் புதிய முதலீட்டாளர்களை எதிர்நோக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார். நிறுவனத்தின் விற்பனை அலுவலகம் அமெரிக்காவின் சிலிகான் வேலி பகுதியில் அமைந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

48 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்