பெட்ரோல், டீசல் விலை மேலும் கடும் உயர்வு: வரி குறைக்கப்படுமா?

By செய்திப்பிரிவு

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 8-வது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவாக சென்னையில் பெட்ரோல், லிட்டருக்கு 79.47 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு, 71.59 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கர்நாடகத் தேர்தலை முன்னிட்டு 19 நாட்களாக விலையை உயர்த்தாமல் இருந்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 14-ம் தேதி விலையை உயர்த்தின. தொடர்ந்து 8-வது நாளாக விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

உலகளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது போன்ற காரணங்க ளால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.500 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது.

உள்ளூர் விற்பனை வரி மற் றும் மதிப்பு கூட்டு வரி மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுவதால் ஒவ்வொரு மாநிலத்திலும் பெட் ரோல் மற்றும் டீசல் விலையில் மாறுபாடுகள் காணப்படுகின்றன.

சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 28 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு 79.47 ரூபாயாக விற்பனையாகிறது. டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 27 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு 71.59 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

வரி குறைக்கப்படுமா?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அவற்றின் மீது விதிக்கப்படும் சுங்க வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதையடுத்து பெட்ரோலியப் பொருட்கள் மீதான சுங்க வரியை குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம் மாநில அரசுகள் வசூலிக்கும் மதிப்பு கூடுதல் வரியை குறைக்கும்படியும் மத்திய அரசு கேட்டுக்கொள்ளும் என  தெரிகிறது. இதுதொடர்பாக பெட்ரோலிய துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.

 

இதை மிஸ் பண்ணாதீங்க:

கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்: செவலியர் உட்பட 16 பேர் பலி?

கர்நாடகத் தேர்தல் காங்கிரஸுக்குக் கற்றுத்தந்த பாடம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

2 mins ago

விளையாட்டு

9 mins ago

கல்வி

56 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்