ஹெச்யுஎல் லாபம் ரூ.1,351 கோடி

By செய்திப்பிரிவு

கடந்த மார்ச்-31 அன்று முடிந்த நான்காம் காலாண்டில் ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் (ஹெச்யுஎல்) லாபம் 14.2 சதவீதம் உயர்ந்து ரூ.1,351 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் லாபம் ரூ.1,183 கோடியாக இருந்தது.

கடந்த காலாண்டில் நிறுவனத்தின் மொத்த விற்பனை அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டை விட 2.63 சதவீதம் அதிகரித்து ரூ.9,003 கோடியாக உள்ளது. 2016-2017 நிதியாண்டின் கடைசி காலாண்டில் இது ரூ.8,773 கோடியாக இருந்தது.

கடந்த காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செலவு 2.28 சதவீதம் குறைந்து ரூ.7,181 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் செலவு ரூ.7,349 கோடியாக இருந்தது. நுகர்வோர் எண்ணிக்கை கடந்த காலாண்டில் 16 சதவீதம் அதிகரித்துள்ளது என ஹெச்யுஎல் தெரிவித்துள்ளது.

புளூஸ்டார் லாபம் ரூ.51 கோடி

ஏர் கண்டீஷனர் தயாரிப்பு நிறுவனமான புளூஸ்டாரின் லாபம் கடந்த காலாண்டில் 2016-2017 நிதியாண்டின் கடைசி காலாண்டை விட 37.82 சதவீதம் அதிகரித்து ரூ.51.23 கோடியாக உள்ளது. கடந்த காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.1,479.70 கோடியாக உள்ளது. 2016-2017 நிதியாண்டின் கடைசி காலாண்டில் வருவாய் ரூ.1,388.61 கோடியாக இருந்தது.

ஒரு பங்குக்கு ரூ.8.50 டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு பங்கொன்றுக்கு ரூ.1.50 சிறப்பு டிவிடெண்ட் வழங்கப்பட இருப்பதாகவும் புளூஸ்டார் நிறுவனம் பங்குச் சந்தைக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

12 hours ago

மேலும்