இண்டிகோ பங்குகள் 18% சரிவு

By செய்திப்பிரிவு

இண்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் (இண்டிகோ) நிறுவனத்தின் பங்குகள் 17.57 சதவீதம் சரிந்து ரூ.111.30 என்ற அளவில் நேற்று வர்த்தகமாயின. 22 ஜனவரி 2016-க்கு பிறகான காலகட்டத்தில் இது மிகப்பெரிய சரிவாகும். 111 ரூபாய் அளவுக்கு பங்கின் விலை சரிவது 2017-ம் ஆண்டு அக்டோபர் 18-ந் தேதிக்குப் பிறகு இதுதான் முதல்முறையாகும்.

இண்டிகோ நிறுவனத்தின் 2017-2018 நிதியாண்டின் நான்காம் காலாண்டு நிகர லாபம் முந்தைய ஆண்டு இதே காலாண்டைவிட 73 சதவீதம் குறைந்து ரூ.117 கோடியாக உள்ளது. 2016-2017 நிதியாண்டின் கடைசி காலாண்டில் லாபம் ரூ.440 கோடியாக இருந்தது.

இன்ஜினில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக சமீபத்தில் 11 (ஏர்பஸ் ஏ320) விமானங்களை தனது சேவையிலிருந்து இண்டிகோ நிறுவனம் விலக்கிக்கொண்டது. கடந்த ஏப்ரல் 26 அன்று இண்டிகோ தலைவராக இருந்த ஆதித்யா கோஷ் ராஜினாமா செய்ததில் இருந்து நிறுவனப் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்