பேமெண்ட் வங்கி தொடங்க என்எஸ்டிஎல் முடிவு

By செய்திப்பிரிவு

பேமெண்ட் வங்கி செயல்பாடுகளை ஒரு மாதத்துக்குள் தொடங்க இருப்பதாக என்எஸ்டிஎல் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து பேமெண்ட் வங்கி நடத்துவதற்கான லைசென்ஸ் ஏற்கெனவே பெற்றுவிட்டதாகவும், வங்கிச் செயல்பாடுகளை தொடங்குவதற்கான அனுமதிக்காக விண்ணப்பம் அளித்திருப்பதாகவும் என்எஸ்டிஎல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஜி.வி. நாகேஷ்வர் ராவ் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் முறையில் செயல்பட இருக்கும் இந்த பேமெண்ட் வங்கி ஒரு மாதத்துக்குள் தனது சேவையைத் தொடங்கும் எனவும் அவர் கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

தற்பொழுது சிபிஎஸ்இ மட்டுமல்லாது 40 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களது கல்வி சான்றிதழ்களை எலெக்ட்ரானிக் முறையில் சேமித்து வைத்திருக்கிறோம். இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டிலுள்ள எல்லா பல்கலைக்கழகங்களும் இதற்குள் வரும் என எதிர்பார்க்கிறோம்.தேசிய கல்வி காப்பகத்தில் இவை டிஜிட்டல் முறையில் சேமிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவருக்கும் தேசிய கல்வி காப்பகத்தில் டிஜிட்டல் கணக்கு உள்ளது. இதுவரை 50 லட்சம் சான்றிதழ்கள் சேமிக்கப்பட்டுள்ளன என நாகேஷ்வர் ராவ் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

உலகம்

9 mins ago

தமிழகம்

36 mins ago

சினிமா

24 mins ago

தமிழகம்

46 mins ago

இந்தியா

44 mins ago

வாழ்வியல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வணிகம்

7 hours ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்