கடந்த காலாண்டில் சுபமுகூர்த்த நாட்கள் குறைந்ததால் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 12 சதவீதம் சரிவு: உலக தங்கக் கவுன்சில் தகவல்

By செய்திப்பிரிவு

மார்ச் மாதம் நிறைவுற்ற கடந்த நிதியாண்டின் கடைசி காலாண் டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை அதற்கு முந்தைய ஆண்டின் அதே காலாண்டைவிட 12 சதவீதம் குறைந்து 115 டன்னாக இருந்ததாக உலக தங்கக் கவுன்சில் (டபிள்யூஜிசி) தெரிவித்துள்ளது. தங்க நகைகளை வாங்குவதில் விருப்பம் குறைந்தது இதற்கு காரணமாகும். கடந்த பத்தாண்டுகளில் தங்கத்துக்கான தேவை இந்த அளவு குறைவது இது இரண்டாவது அதிகபட்ச அளவாகும் எனவும் டபிள்யூஜிசி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள் ளது.

இருப்பினும் பருவமழை மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க அரசு எடுக்கும் முயற்சிகள் போன்றவற்றால் தங்கத்துக்கான தேவை கிராமப்புறங்களில் அதிகரிக்கும் எனவும் டபிள்யூஜிசி தெரிவித்துள்ளது.

தங்கத்தை அதிகளவு பயன்படுத்துவதில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. தங்கம் அதிகமாக இறக்குமதி செய்வதன் காரணமாக இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.

பருவமழை பற்றிய நம்பிக்கை தரும் கணிப்புகள் மற்றும் விவசாயப் பொருட்களுக்கு அரசு மானியம் அளிப்பது போன்றவற்றால் கிராமப்புறப் பகுதிகளில் வருவாய் அதிகரிப்பு ஏற்படுவதன் வழியாக தங்கத்துக்கான தேவை அதிகரிக்கும் என டபிள்யூஜிசியின் இந்திய செயல்பாடுகளுக்கான நிர்வாக இயக்குநர் பி.ஆர். சோமசுந்தரம் நம்பிக்கை தெரிவித்தார். இந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தங்கத்துக்கான தேவையின் சராசரி கடந்த ஆண்டின் மூன்று காலாண்டுகளைவிட அதிகமாக இருக்கும் எனவும் அவர் கூறினார். கிராமப்புறங்களில் செல்வத்தை சேமிக்கும் பாரம்பரியம ான வழியாக தங்கம் வாங்குவது கருதப்படுவதால் மூன்றில் இரண்டு பங்கு தங்கத்துக்கான தேவை கிராமப்புறங்களில் இருந்து ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

2018-ம் ஆண்டு சராசரியான பருவமழைப் பொழிவு இருக்கும் என் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. இதன்மூலம் விவசாய உற்பத்தி அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாதம் அரசு தாக்கல் செய்திருக்கிற பட்ஜெட்டில் பல்வேறு பயிர் வகைகளுக்கு அதன் உற்பத்தி விலையில் 1.5 மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் சந்தையில் தங்கம் சார்ந்த பொருட்கள் கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிக விலையில் வர்த்தகமானதும், ரூபாயின் மதிப்பு கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவு அடைந்ததும், மார்ச்சில் முடிந்த காலாண்டில் திருமணத்துக்கேற்ற நாட்களாக கருதப்படுபவை குறைவாக இருந்ததும் தங்கத்துக்கான தேவை குறைந்ததற்கான காரணங்கள் என சோமசுந்தரம் கூறினார்.

கடந்த காலாண்டில் வெறும் 7 நாட்கள் மட்டுமே திருமணத்துக்கு உரிய நாட்களாக கருதப்பட்டதாகவும், முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 22 நாட்கள் திருமண நாட்களாக கருதப்பட்டதாகவும் கூறிய சோமசுந்தரம், இனிவரும் நாட்களில் 2017-ம் ஆண்டு அளவுக்கு திருமண நாட்கள் உண்டு என்று கூறினார்.

2018-ம் ஆண்டு இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 700-ல் இருந்து 800 டன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இது 737.5 டன்களாக இருந்தது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தங்கத்துக்கான சராசரி தேவை 840 டன்களாக இருந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

இந்தியா

5 mins ago

வாழ்வியல்

24 mins ago

சுற்றுலா

27 mins ago

வணிகம்

6 hours ago

இந்தியா

52 mins ago

சினிமா

47 mins ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

மேலும்