விவசாயிகளுக்கு ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்கு: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்

By செய்திப்பிரிவு

வேளாண் சார்ந்த பணிகளுக்கு விவசாய நிலங்களை அளித்தால் அவை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விலக்கு வரம்பில் வருவதாக மத்திய நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

விவசாயம், வன வளர்ப்பு, மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற பணிகளுக்கு நிலங்களை வாடகைக்கு அளித்தாலும் அதற்கு சரக்கு மற்றும் சேவை வரி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சார்ந்த உப பணிகளான காடு வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு போன்றவற்றுக்கு நிலம் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு அளித்தால் அதற்கு ஜிஎஸ்டி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி விவசாய பணிகளுக்காக வாடகைக்கு அல்லது குத்தகைக்கு நிலம் அளிப்பது மற்றும் பங்குதாரராக விவசாயம் செய்வது உள்ளிட்டவை அனைத்தும் ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்கு பெறுவதாக நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல விவசாயிகளுக்கு ஜிஎஸ்டி பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் எனப்படுபவர் தனி நபராகவோ அல்லது இந்து முறைப்படி கூட்டு குடும்ப உறுப்பினரோ விவசாயம் மேற்கொண்டால் அதாவது தங்களுக்கு சொந்தமான நிலத்தில் அல்லது வாடகை நிலத்தில் பணியாளர்களை வைத்தோ விவசாயப் பணிகளை மேற்கொள்பவர்கள் விவசாயிகள் என வரையறுக்கப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை விவசாயிகளுக்கு எந்த வகையிலும் வரி விதிக்கப்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

உலகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்