பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட்கள் கையாளும் தொகை ரூ.8 லட்சம் கோடி

By செய்திப்பிரிவு

பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்டில் கடந்த ஏப்ரலில் ரூ.12,400 கோடி முதலீடு வந்திருக்கிறது. இதன்மூலம் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட் கையாளும் தொகை ரூ.8 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த மார்சில் ரூ.6,650 கோடி அளவுக்கு பங்குச்சந்தை முதலீடு வந்துள்ளது.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் பங்குச்சந்தை சரியத் தொடங்கியது. இதனால் சந்தை மதிப்பில் கவனமாக இருக்கும் மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் அதிகமாக முதலீடு செய்யத் தொடங்கினார்கள். தவிர மார்ச் மாதம் இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்துவதற்காக மியூச்சுவல் பண்டில் இருந்து வெளியே எடுக்கும் தொகை அதிகமாக இருக்கும். அதனால் மார்ச் மாதம் முதலீடு குறைந்தது. தவிர ஏப்ரலில் புதிய பண்ட் வெளியீடுகள் இருந்ததாலும் முதலீடுகள் அதிகமாக இருந்ததாக எஸ்ஸெல் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி விரல் பெரவலா கூறினார்.

இதே கருத்தை பண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் மியூச்சுவல் பண்ட் ஆராய்ச்சி பிரிவு தலைவர் வித்யா பாலாவும் கூறினார். பங்குச்சந்தை சரிவு மற்றும் நீண்ட கால மூலதன ஆதாய வரி குறித்த அச்சங்கள் காரணமாக முதலீடுகள் வெளியேறியது. இதுகுறித்த கவலைகள் குறைந்த பிறகு, ஏப்ரலில் அதிக முதலீடு வந்திருக்கிறது எனக் கூறினார்.

ஒட்டுமொத்தமாக கடந்த மார்ச் மாதம் ரூ.50,752 கோடி வெளியேறியது. மாறாக ஏப்ரல் மாதம் ரூ.1.14 லட்சம் கோடியாக முதலீடு இருந்தது. இதில் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட் முதலீடு ரூ.12,409 கோடியாக இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக 42 மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் தொகை ரூ.23.25 லட்சம் கோடியாக இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

9 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

33 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

53 mins ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்