மாருதி கடந்த நிதி ஆண்டில் 1.60 லட்சம் கார்கள் விற்பனை

By செய்திப்பிரிவு

நாட்டின் மிகப்பெரிய கார் விற்பனை நிறுவனமான மாருதி கடந்த நிதி ஆண்டில் 1.60 லட்சம் கார்களை விற்பனை செய்திருக்கிறது. முந்தைய 2016-17-ம் நிதி ஆண்டில் 1.39 லட்சம் கார்களை மாருதி விற்பனை செய்திருக்கிறது. உள்நாட்டு விற்பனை 16 சதவீதம் உயர்ந்து 1.48 லட்சமாக இருக்கிறது.

மார்ச் மாதத்தில் சிறிய ரக கார்களின் (ஆல்டோ, வேகன்ஆர்) விற்பனை 21 சதவீதம் உயர்ந்து 37,511 ஆக இருந்தது. காம்பேக்ட் பிரிவின் (ஸ்விப்ட், எஸ்டிலோ, டிசைர் மற்றும் பலேனோ) விற்பனை 13.5 சதவீதம் உயர்ந்து 68,885 ஆக இருக்கிறது. நாட்டின் இரண்டாவது பெரிய இரு சக்கர வாகன விற்பனை நிறுவனமான ஹீரோமோட்டோ கார்ப் 75 லட்சம் வாகனங்களை கடந்த நிதி ஆண்டில் விற்பனை செய்திருக்கிறது. கடந்த 2016-17-ம் நிதி ஆண்டில் 66.6 லட்சம் வாகனங்களை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

14 mins ago

ஜோதிடம்

12 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

17 mins ago

இந்தியா

21 mins ago

சினிமா

45 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

29 mins ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்