கடந்த நிதியாண்டில் எஸ்ஐபி முறையிலான முதலீடு 92 சதவீதம் உயர்வு

By செய்திப்பிரிவு

முதலீட்டாளர்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு மற்றும் நம்பிக்கை காரணமாக எஸ்ஐபி முறையிலான முதலீடு (மியூச்சுவல் ஃபண்ட்களில்) செய்வது 92 சதவீதம் அதிகரித்துள்ளதாக கேம்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைமைச் செயல் அதிகாரி அனுஜ் குமார் தெரிவித்துள்ளார்.

சில்லறை முதலீட்டாளர்கள் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வதை அதிகம் விரும்புவதாக தெரிவித்த அவர் , 2018-ம் நிதியாண்டில் 1.15 கோடி புதியவர்கள் எஸ்ஐபி முறையில் பதிவு செய்துள்ளதாகவும், இது முந்தைய (2016-17) ஆண்டை விட 92 சதவீதம் அதிகம் எனவும் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

கடந்த மூன்று ஆண்டுகளாக , எஸ்ஐபி முறையிலான மியூச்சுவல் ஃபண்ட்கள் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி கண்டுள்ளன. 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யப்பட்டுள்ள தொகை ரூ.7,000 கோடி. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட இது இரண்டு மடங்கு (2017 ஏப்ரலில் ரூ.3,000 கோடி மட்டுமே) அதிகம்.

ஒரு தனிநபர் முதலீடு செய்யும் சராசரி தொகை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3,546-ஆக இருந்தது. இப்பொழுது இதுவும் நல்ல முன்னேற்றம் கண்டு ரூ.3,850-ஆக இருக்கிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் வாழ்பவர்கள் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வது 45 சதவீதமாக உள்ளது. இவை மியூச்சுவல் ஃபண்ட் சந்தைக்கான பெரிய வாய்ப்புகளாக உள்ளன.

மியூச்சுவல் ஃபண்ட் துறை, இந்திய மியூச்சுவல் ஃபண்ட் கூட்டமைப்பு மற்றும் இடைத் தரகர்கள், மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பங்களித்துள்ளார்கள். ஏற்ற இறக்கமான சந்தைச் சூழலில் நல்ல வருவாயைப் பெறுவதற்கு எஸ்ஐபி சிறந்த வழிமுறை என அனுஜ் குமார் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

இந்தியா

19 mins ago

சினிமா

14 mins ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்