100 சதவீதம் சூரிய ஆற்றலில் செயல்படும் ஆப்பிள் நிறுவனம்

By செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் இருக்கும் ஆப்பிள் நிறுவனங்கள் 100 சதவீதம் மரபுசாரா எரிசக்தியில் செயல்படுவதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 43 நகரங்களில் ஆப்பிள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ரீடெய்ல் ஸ்டோர்கள், அலுவலகங்கள், டேட்டா மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் மரபு சாரா எரிசக்தியில் செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பல ஆண்டுகள் கடுமையான உழைப்புக்கு பிறகு இந்த இலக்கினை எட்டி இருக்கிறோம். எங்களுக்குக் கிடைத்த உலகத்தை விட சிறப்பான உலகத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்ல இருக்கிறோம் என ஆப் பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். மேலும் எதிர்காலம் மரபு சாரா எரிசக்தியில்தான் இருக்கிறது என்று கூறியிருக்கி றார்.

நாங்களும் எங்களது பங்குதாரர்களும் மரபு சாரா திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறோம். சோலார், பயோகேஸ் பியுயல் செல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் முதலீடு செய்துவருகிறோம் என ஆப்பிள் தெரி வித்தது.

தற்போதைக்கு உலகம் முழுவதும் 25 மரபு சாரா எரிசக்தி திட்டங்கள் மூலம் 626 மெகாவாட் மின்சாரத்தை ஆப்பிள் உற்பத்தி செய்கிறது. மேலும் 15 திட்டங்கள் கட்டுமான பணியில் இருக்கிறது. இவை செயல்பட தொடங்கும்பட்சத்தில் 1.4 ஜிகாவாட் மின் உற்பத்தி இருக்கும் என ஆப்பிள் கூறியிருக்கிறது.

இதேபோன்ற ஒரு அறிவிப்பை கடந்த டிசம்பர் மாதம் கூகுள் அறிவித்தது. டிசம்பரில் 100 சதவீத மரபுசாரா எரி சக்தியில் செயல்படுவதாக கூகுள் அறிவித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

9 mins ago

தமிழகம்

31 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்