இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை உலக அளவில் கொண்டு செல்ல புதிய அறக்கட்டளை: சென்னை ஐஐடி தொடங்கியது

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய ஸ்டார்ட்-அப் தொழில் நிறுவனங்களை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில் புதிய ஆராய்ச்சி அறக்கட்டளையை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. இந்தியாவில் உருவாகும் புதிய தொழில்நுட்பங்கள், ஸ்டார்ட்-அப் தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிய காப்புரிமைகளை உலக அளவில் எடுத்துச்செல்லும் நோக்கில் சென்னை ஐஐடி புதிய ஆராய்ச்சி அறக்கட்டளையை தொடங்கியுள்ளது.

இந்த அறக்கட்டளையின் தலைமைச் செயல் அலுவலராக வணிக மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிபுணர் திருமலை மாதவநாராயண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சர்வதேச சந்தைகளில் நுழையும். மேலும் ஐஐடியின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான நிதியுதவி உலக அளவில் கிடைக்கும். ஐஐடியின் படிப்புகள் உலகளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் வழங்கப்படும்.

இந்திய நிறுவனங்களின் காப்புரிமைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் வணிகரீதியாக பயன்படுத்தப்படும். இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு சர்வதேச அளவில் தொழில்நுட்ப உதவிகளும், நிதியுதவிகளும் கிடைக்கும். ஐஐடி பழைய மாணவர்கள் ஐஐடி உருவாக்கும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடியும்.

இதுகுறித்து ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கூறும்போது, ``உலகத்தை வழிநடத்தும் நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இந்தியாவில் உருவாக வேண்டும் என்ற இலக்குடனும் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

50 mins ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

57 mins ago

க்ரைம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்