புதிய தொழில் கொள்கை தொழில்துறை பிரதிநிதிகளை சந்திக்க அமைச்சர் சுரேஷ் பிரபு முடிவு

By செய்திப்பிரிவு

புதிய தொழில் கொள்கை உருவாக்கத்துக்காக தொழில் துறையின் முக்கிய பிரதிநிதி களுடன் ஆலோசனை நடத்தமத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு முடிவு செய்துள்ளார். முதலாவது கூட்டம் பிப்ரவரி 2-ம் தேதி குவாஹாட்டியில் நடைபெற உள்ளது. இரண்டாவது கூட்டம் பிப்ரவரி 9-ம் தேதி நடைபெற உள்ளது.

புதிய தொழில் கொள்கை குறித்த வரைவு கொள்கையை மத்திய வர்த்தக அமைச்சகம் தயாரித்துள்ளது. இது முந்தைய 1991-ம் ஆண்டு வெளியான தொழில் கொள்கையுடன் முற்றிலும் மாற்றாக உருவாக்கப்பட்டுள் ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொழில் கொள்ளை மற்றும் மேம்பாட்டு துறை ஒரு வரைவு தொழில் கொள்கையை வெளியிட்டது. அடுத்த 20 ஆண்டுகளில் பெருமளவு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழில் கொள்கை வகுக்கப்பட்டிருந்தது. தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட எளிமை யான தொழில்கொள்கை மூலம் ஆண்டுக்கு 10,000 கோடி டாலர் தொகையை வருமானமாக ஈட்டவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

உரிய செயல் திட்டத்துடன் கூடிய சிறந்த பலனை அளிக்கக் கூடியதாக இந்த செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொழில்துறையினர் சர்வ தேச போட்டிகளை எதிர்கொள்ளும் அளவுக்கு தொழில்துறையை வலுப்படுத்துவதற்கான அம்சங்களும் புதிய தொழில்கொள்கையில் இடம்பெறும் என்று தெரிகிறது. தற்போது உள்ள கொள்கைகளை எளிமைப்படுத்துவது மற்றும் தொழில்துறைக்கு சாதகமான, முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புதிய கொள்கை இருக்கும் என்று தெரிகிறது. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

25 mins ago

ஜோதிடம்

28 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்