வேலைவாய்ப்புக்கு ரூ.14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு: 4 கோடி வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு

By செய்திப்பிரிவு

2018-19ம் நிதி ஆண்டில் நாட்டில் 4 கோடி வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும், வேலைவாய்ப்புகளை உருவாக்க ரூ.14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.

2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசி வருகிறார். பட்ஜெட் அறிவித்ததில் இருந்து ஆங்கிலத்திலும், இந்தியிலும் மாறி மாறி பேசி வருகிறார். அவர் பேசியதாவது-

2018-19ம் நிதிஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 சதவீதம் இருக்கும்.

1. 4 கோடி கிராமப்புற வீடுகளுக்குகட்டணமில்லா மின் இணைப்பு வழங்கப்படும்.

2. 8 கோடி ஏழை பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்க திட்டம்

3. தூய்மை இந்தியா திட்டத்தில் அடுத்த ஓர் ஆண்டில் 2 கோடி கழிவறைகள் கட்டப்படும்.

4. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பஞ்சாப், டெல்லி ஹரியானா மாநிலங்களுக்கு நிதி

5. மீன்வளம், கால்நடைத்துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி

6. மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி கடன் வழகங்க இலக்கு

7. வேலைவாய்ப்புக்காக ரூ.14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

12 mins ago

சுற்றுச்சூழல்

22 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்