இந்தியாவின் வளர்ச்சி 7.5 சதவீதம்: டி அண்ட் பி

By செய்திப்பிரிவு

2015 முதல் 2020-ம் ஆண்டு வரையில் இந்தியாவின் சராசரி வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று டன் அண்ட் பிராட்ஸ்ட்ரீட் (டி அண்ட் பி) நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கட்டுமானத் துறையில் அரசு செய்யும் முதலீடுகளை பொறுத்தும், தனியார் துறை முதலீடுகள் அதிகரிப்பதை பொறுத்தும் இருக்கும் என்று இந்த நிறுவனத்தின் முதன்மை பொருளாதார அறிஞர் அருண் சிங் தெரிவித்தார். இந்த அரசு சீர்திருத்தங்கள் கொண்டு வருவதில் முயற்சி எடுத்து வருகிறது. இவற்றை தொடர்ந்து செயல்படுத்தும் பட்சத்தில் இந்தியாவின் ஜிடிபி 2020-ம் ஆண்டு 4.5 டிரில்லியன் டாலராக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

தற்போது மந்தமாக இருக்கும் இந்தியாவின் வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் பாதியில் வேகம் எடுக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 2015-16-ம் ஆண்டின் வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. இந்தியாவின் பலங்கள் மற்றும் பலவீனங்களை கணக்கில் எடுத்து ‘இந்தியா 2020’ என்ற இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஓடிடி களம்

8 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்