தொழில்முனைவின் அடிப்படை நோக்கம் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்: சிஐஐ விருது வழங்கும் விழாவில் சுரேஷ் கிருஷ்ணா பேச்சு

By செய்திப்பிரிவு

தொழில்முனைவின் அடிப்படை நோக்கம் வேலை வாய் ப்பை உருவாக்குவதாக இருக்க வேண்டும் என சுந்தரம் பாஸனர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்தார். வளர்ந்து வரும் தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக விருது வழங்கும் விழாவை இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) வெள்ளிக்கிழமை சென்னையில் நடத்தியது. ஐந்து பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுரேஷ் கிருஷ்ணா கூறியதாவது:

தனிப்பட்ட நபர்களின் ஐடியாவால் தொழில்முனைவு உருவாகி சிறிய நிறுவனம், பெரிய நிறுவனம் என வளர்கிறது. ஆனால் இதன் அடிப்படை நோக்கம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுதான். தற்போதைய உலகின் தேவை இதுதான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நம் அனைவரு க்கும் கிடைக்கும் வசதிகள் அனைத்தும் அனைவருக்கும் கிடைப்பதில்லை. வேலை வாய்ப்பினை உருவாக்கும் போது அவர் சார்ந்த குடும்பத்தின் வாழ்க்கைத்தரம் உயரும். எனவே இந்த எண்ணத்துடன் செயல்பட வேண்டும் என்றார்

திருப்பூரை சேர்ந்த பிஎஸ் அப்பரல் நிறுவனத்தின் பி. விஜயராகவன், ஹைதராபாத்தை சேர்ந்த சைக்னி (Cygni) எனர்ஜி நிறுவனத்தின் வெங்கட் ராஜாராமன், ஹைதராபாத்தை சேர்ந்த இண்டெலிஜான் எனர்ஜி நிறுவனத்தின் குஷாந்த் உப்பல், பெங்களூரூவை சேர்ந்த ஸ்டெலாப்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் வெங்கடேஷ் சேஷசாயி மற்றும் ஜிபோ ஆர்என்டி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் ராஜ் பிரகாஷ் ஆகியோருக்கு வளர்ந்து வரும் தொழில் முனைவோர் விருது வழங்கப் பட்டது.

நிகழ்ச்சியில் கெவின்கேர் நிறுவனத்தின் ரங்கநாதன், டேலர் ரப்பர் நிறுவனத்தின் அசோக் உள்ளிட்ட தொழில்துறையை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்